Friday, March 24, 2023
மேலும்
    Homeஅறிவியல்ஏலத்தில் தங்கத்தினை மிஞ்சும் அளவுக்கு விலை போன வின்ச்காம்ப் விண்கல் பாகங்கள்!!!

    ஏலத்தில் தங்கத்தினை மிஞ்சும் அளவுக்கு விலை போன வின்ச்காம்ப் விண்கல் பாகங்கள்!!!

    கடந்த ஆண்டு 2021-ல் இங்கிலாந்தில் உள்ள வின்ச்காம்ப் நகரில் விழுந்த விண்கல்லின் 1.7 கிராம் எடையுள்ள பகுதி மட்டும் 12,600 டாலர் அதாவது, இந்தியா மதிப்பில் 9,48,871-க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

    வின்ச்காம்ப் விண்கல் பாகங்கள்

    அதன், இரண்டாவது பாகம் 20,20,678-க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், முதலில் ஏலத்தில் விற்கப்பட்ட ஒரு கிராமின் மதிப்பை விட இது குறைவாகவே இருந்தது. இந்த சிறிய விண்கல் பாகங்கள் அவற்றின் விற்பனைக்கான மதிப்பீட்டை விட அதிகமாக இருந்தன.

    இந்த வின்ச்காம்ப் விண்கல் இதுவரை மீட்கப்பட்ட விண்கல்களில் மிகவும் முக்கியமான விண்வெளிப் பாறையாக அறிவியல் ரீதியாகக் கருதப்படுகிறது. இந்த விண்கல் சூரிய குடும்பத்தின் உருவாக்கக் காலத்தின் மிகவும் பழமைதன்மை கொண்ட வேதியியலைக் (pristine chemistry) கொண்டுள்ளதாக கூறிகின்றனர்.

    வின்ச்காம்ப் விண்கல் பாகங்கள்

    2013-ஆம் ஆண்டு ரஷ்ய நகரமான செல்யாபின்ஸ்க் மீது விழுந்த சிறிய விண்கல்லின் மதிப்பு கிட்டத்தட்ட 3,000 பவுண்ட் ஆகும். இந்த பாகங்களின் மதிப்பீட்டை விட வின்ச்காம்ப் விண்கல் இரண்டு மடங்கு அதிகமாகும்.

    வின்ச்காம்ப் விண்கல் என்பது CM2 கார்பனேசியஸ் காண்ட்ரைட் (CM2 carbonaceous chondrite ) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உட்பட கிரகங்கள் எவ்வாறு உருவானது என்பதற்கான தடயங்களை வழங்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வின்ச்காம்ப் நகரில் இந்த விண்கல் விழுந்ததால் இதற்கு ‘வின்ச்காம்ப் விண்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    வின்ச்காம்ப் விண்கல் பாகங்கள்

    வின்ச்காம்ப் அருகே சேகரிக்கப்பட்டவற்றில் 90% அதிகமானவை இப்போது, பொது சொத்தாக உள்ளது. உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது. வின்ச்காம்ப் விண்கல்லின் 100 கிராம் எடையுள்ள பாகம் பார்வையாளர்கள் பார்க்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

    வின்ச்காம்ப் விண்கல் பாகங்கள்

    கிறிஸ்டிஸ் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் விண்கல் விற்பனையை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நிகழ்வில் உள்ள பல விண்கற்கள் மகோவிச் சேகரிப்பில் இருந்து வந்தவை ஆகும். அவற்றில் ஏலத்தில் வரும் சில பொருட்கள் பார்ப்பதற்கு பிரமிக்க வைக்கின்றன.

    ஏன்னென்றால் பெரும்பாலான விண்கற்கள் காலத்தின் தொடக்கத்தில் உருவானவையாகும். அழகியல் ரீதியாக தங்கம், வைரத்தை விட விண்கல் வசீகரிக்கும் பொருள்கள்லாகவும் அதிக மதிப்பில் உள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    chennai metro station

    மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  பணமில்லா...