Thursday, March 23, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'அதில் நான் சக்கரவர்த்தியடா' - வசூலில் வேறு மாதிரியான ஆட்டம் ஆடும் தளபதி விஜய்!

    ‘அதில் நான் சக்கரவர்த்தியடா’ – வசூலில் வேறு மாதிரியான ஆட்டம் ஆடும் தளபதி விஜய்!

    ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி என்ற வெறும் நாளில் வெளியாகிய திரைப்படம்தான், பீஸ்ட். ஆனால் விஜய் ரசிகர்கள் அந்த வெறும் நாளையும் திருநாளாக மாற்றினர். திரையரங்குகளுக்கு முன் அவர்கள் நிகழ்த்திய கொண்டாட்டங்கள் அவ்வாறனாதாகும். 

    தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய் பீஸ்ட் திரைப்படத்தைப் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், பீஸ்ட் அனைவரின் ஆவலையும் போக்கியதா என்றால்? அதற்கான பதில் இல்லை என்பதுதான். அதே சமயம், அனைவருக்குமே பீஸ்ட் பிடிக்காமலும் போகவில்லை. 

    எதிர்மறையைத் தாண்டிய ஹவுஸ்ஃபுல்

    திரைப்படம் வெளியானது முதல் இன்று வரை பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால், விமர்சனத்தைப் பற்றி துளியும் கண்டுக்கொள்ளாதவாக்கில்தான் பீஸ்ட் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக கலவையான மற்றும் எதிர்மறை விமர்சனங்களையெல்லாம் மீறி பீஸ்ட் திரைப்படம் ஒளிபரப்பபடும் திரையரங்குகள் பல ஹவுஸ்ஃபுல் என்று அறிவித்துள்ளன. 

    மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட பல பெரிய திரையரங்கு உரிமையாளர்களும், பீஸ்ட் இதுவரை நல்ல இலாபம் ஈட்டித்தருவதாக தெரிவித்தனர். இது இணையத்தில் வைரலானது. திரைப்படம் எப்படியாக இருந்தாலும், விஜய் நடித்திருந்தால் அத்திரைப்படத்தை பெருவாரியான மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்கின்றனர் எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர். 

    இருநூறு கோடி வசூல்

    இந்நிலையில், பீஸ்ட் திரைப்படமானது வெறுமனே ஐந்து நாட்களில் இருநூறு கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் இந்த சாதனை வியப்புக்குரிய ஒன்றே!

    ஆம், திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றும், கே.ஜி.எஃப் எனும் பெரிய திரைப்படம் வெளியாகியும், சன் பிக்சர்ஸ் பெரியதாக புரோமஷன்களை முன்னெடுக்காத நிலையிலும்பீஸ்ட் இருநூறு கோடி வசூலித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

    விஜய் ரசிகர்கள், இந்த வசூல் சாதனையை இணையத்தில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 40 கோடி வசூலித்து பெரும் சாதனையைப்படைத்தது குறிப்பிடத்தக்கது. 

    தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில், மாஸ்டர், மெர்சல், சர்கார் போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே இருநூறு கோடிக்கும் அதிகமான வசூல் செய்த நிலையில், தற்போது பீஸ்ட் திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. இதன்மூலம், விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ஐந்து திரைப்படங்கள் இருநூறு கோடிக்கும் வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க; நான் ஒரு பிராண்ட் என மீண்டும் நிரூபித்த தளபதி விஜய்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    sivagangai

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்களை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நேற்று சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு...