Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்காவல்துறையின் யோசனையால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆன சூப்பர் ஸ்டார்!

    காவல்துறையின் யோசனையால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆன சூப்பர் ஸ்டார்!

    எந்த ஒரு அறிவுறுத்தலையும், விழிப்புணர்வையும் ஒரு உதாரணத்துடன் சொல்லும்போது அவை எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும், புரிந்துக்கொள்ளப்படும். தரப்படும் உதாரணம் அனைவருக்கும் பழக்கப்பட்டது என்றால், சொல்லப்படும் அறிவுரை இன்னும் எளிதாக சென்று சேரும். இப்படியான ஒரு யுக்தியைத்தான் தனது விழிப்புணர்வு காணொளியில் தெலுங்கானா காவல்துறை கையாண்டுள்ளது.

    baba-rajinikanth

    தெலுங்கானா காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்தான் இப்படியான ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆம்!  ‘சைபராபாத் டிராஃபிக் போலீஸ்’ என்ற தெலுங்கானா காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது.

    அக்காணொளியில், அவர்களின் பாபா திரைப்படத்தில் உள்ள காட்சி ஒன்று இடம்பெறுள்ளது. பாபா திரைப்படத்தில், கதாநாயகி மனிஷா கொயிரலா அவர்களின் வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்று உறவினர்களை வெளிய போக சொல்லும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அக்காட்சிதான் காவல்துறையினரின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

    மேல் சொன்ன காட்சியில் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு எந்த தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர். இதற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி ட்ரெண்ட் அடித்து வருகிறது.

    பாபா திரைப்படம் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....