Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமத்திய அமைச்சகத்தையே மிரட்டும் தெலுங்கானா அரசு : தண்ணீர், மின்சாரம் ரத்து !

    மத்திய அமைச்சகத்தையே மிரட்டும் தெலுங்கானா அரசு : தண்ணீர், மின்சாரம் ரத்து !

    தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள இராணுவ முகாமிற்குச் செல்லும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை ரத்து செய்யப்போகிறோம் என அம்மாநிலத்தின் அமைச்சர் கூறியுள்ளது அனைவரது மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Chandrasekara Rao

    தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் சந்திரசேகரராவும், அவரது கட்சியினரும் சமீப காலங்களாகவே மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்பொழுது, சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள முதல்வர் சந்திரசேகரராவின் மகனும் மாநில நகராட்சி மற்றும் தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் இங்கு உள்ள இராணுவ மையம் மத்திய இராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இராணுவ வீரர்களும் வசித்து வருகின்றனர். ஆனால், நாட்டின் மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவது போல இங்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதில்லை. சாலைகளை அமைத்தல் அல்லது சீரமைத்தல் போன்ற எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. மேலும், அப்பகுதியில் அடிக்கடி சாலைகள் மூடியும் வைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் அந்த சாலைகளைப் பயன்படுத்த முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

    KT Rama rao

    இதுகுறித்து மத்திய அமைச்சகத்திடம் பலமுறை புகார் தெரிவித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக எம்பிக்கள் இந்த விஷயத்தில் எந்த உதவியும் செய்யவில்லை. ஆகையால், இராணுவ மையத்துக்கு செல்லும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் தடை செய்ய உள்ளோம். இதன்பிறகாவது ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதில் கூறியுள்ளார்.

    அமைச்சரின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பதிலளித்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுபாஷ், அமைச்சர் கே.டி.ராமராவ் நன்கு படித்தவர், விஷயம் அறிந்தவர், ஆனால் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது முற்றிலும் அர்த்தமற்றதாக உள்ளது என்றும், இவ்வாறு அவர் பேசியிருப்பது இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பது போல உள்ளது என்றும் கூறியுள்ளார்.   

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    weather

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள...