Monday, March 18, 2024
மேலும்
    Homeவாகனம்டாடா நிறுவனம் அறிமுகம் செய்யும் புதுவகை எலக்ட்ரிக் கார் ; வியக்க வைக்கும் முக்கிய அம்சங்கள்...

    டாடா நிறுவனம் அறிமுகம் செய்யும் புதுவகை எலக்ட்ரிக் கார் ; வியக்க வைக்கும் முக்கிய அம்சங்கள் உள்ளே!

    டாடா நிறுவனம் அதன் புதிய எஸ்யுவி கான்செப்ட்டை தற்பொழுது முடித்துள்ளது. இந்த கான்செப்ட் எஸ்யுவியானது கர்வ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவி கான்செப்ட் கூப் வடிவத்தைப் போன்ற கூர்மையான கோடுகள் மற்றும் எதிர்கால வடிவமைப்பு கூறுகளை கொண்டுள்ளது.  டாடா நிறுவன மின்சார கார்களின் வரிசையில் இந்த காரானது இரண்டு ஆண்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. 

    வடிவமைப்பின் அடிப்படையில் டாடா கர்வ் அனைத்து முன்பக்கங்களிலும் நன்கு பருமனான அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் உள்ள முழு அகலமுள்ள எல்இடி டிஆர்எல், முக்கோண எல்இடி ஹெட்லாம்ப் ஹவுஸிங்ஸ், சமீபத்திய டாடாக்களின் அடிப்படையில் எஸ்யுவி மாடல்களைப் போன்றே தனித்துவமான தோற்றத்தில் காணப்படுகிறது. காரின் முன் மற்றும் பின்புற பெண்டர்கள் விரிவடைவதால் இது மேலும் எஸ்யுவி அமைப்பை வலியுறுத்துகிறது. 

    பின்புறத்தில் முழு அகல டெயில்லேம்ப் ஸ்டிரிப் உள்ளது. பின்புற கண்ணாடியைச் சுற்றிலும் தனித்தன்மை வாய்ந்த எல்இடி பட்டைகள் உள்ளன. டாடா நிறுவனம் வடிவமைப்பில் முன்னேறி டாடா கர்வ் காரின் ஏரோடைனமிக் செயல்திறனை அதிகரித்துள்ளது. இது அதன் ஈவி வரம்பை அதிகரிக்கிறது. பேனட்டின் அடியில் காற்று சேனல்கள் உள்ளன. சி-பில்லர் காற்று துவாரங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஏரோ-பிளேடு செருகல்கள் உள்ளன. 

    உள்ளே கேபின் ஒரு ஒழுங்கற்ற அணுகுமுறையுடன், வெளிப்புறத்தின் தீவிர வடிவமைப்பில் இருந்து வெகுதொலைவில் இல்லை. இதனோடு சேர்த்து மிதக்கும் டேஷ்போர்டு, அதன் மீது லைட் பார் மற்றும் மேலும் அதன் மேலேயும் கீழேயும் பளப்பான அமைப்புடன் கூடிய பூச்சு ஆகியவை உள்ளது. இந்த மிதக்கும் டேஷ்போர்டில் ஃப்ரீ ப்ளோட்டிங் இன்போடெயின்மெண்ட் டிஸ்பிளே மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்பிளே ஆகியவை உள்ளன. நடுவில் இடையே கண்ணாடி பேனல்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான கருவிகள் உள்ளன. 

    சென்ட்ரல் கன்சோல் என்பது சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட்டின் மிதக்கும் நீட்டிப்பாகும். ஸ்டியரிங் கட்டுப்பாடுகளுக்கான டச்-இன்புட் மற்றும் ஒளியேற்றப்பட்ட டாடா லோகோவுடன் கூடிய கடினமான பூச்சு உள்ளது. பின்புறத்தில் இரண்டு தனிப்பட்ட பக்கெட் இருக்கைகள் உள்ளன. கண்ணாடி பேனலால் உருவான கூரை முழுவதுமாக பூட்லிட் சுற்றி இயங்குவதால் உள்புறம் ஒரு காற்றோட்டமான உணர்வைத் தருகிறது. 

    டாடா நிறுவனம் பவர்ட்ரைன் சார்ந்த விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், ஜெனரேஷன் 2இவி கட்டமைப்பு நெகிழ்வு விருப்பங்களை அனுமதிக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. பிளாட்பார்மில் உள்ள கர்வ் மற்றும் பிற ஈவிக்கள் வெவ்வேறு பேட்டரி உள்ளமைவுகளுடன் ஒற்றை, இரட்டை மற்றும் பலவித மின்சார அமைப்புகளை வெளிப்படுத்த இது அனுமதிக்கும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டும் வருடங்களில் வெளியாக இருக்கும் இந்த கார், எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டை குறி வைத்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....