Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமதுவிலக்கு! மதுவிலக்கு! என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துமா?

    மதுவிலக்கு! மதுவிலக்கு! என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துமா?

    தமிழ்நாட்டில் இயங்கி வரும் பார்களை ஆறு மாதத்திற்குள் மூட உத்தரவிட்டுள்ளது, சென்னை நீதி மன்றம். தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தின்படி  பொது இடத்தில் அருந்தக்கூடாது. தனியார் இடத்தில் அதாவது ஒருவர் தன் வீட்டில் வைத்து மது அருந்தலாம். 

    இத்தகைய சட்ட அமலை தமிழகம் மதிப்பதே இல்லை. கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த சட்ட விதிக்கு புறம்பாகத்தான் பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனையில்  திகழ்கிறது. அதற்காக பொது இடத்தில் பொதுமக்கள் மது அருந்துவதற்கு பார் நடத்த அனுமதி இல்லை.

    TASMAC bar மேலும், சென்னை உயர்நீதி மன்றத்தில், அரசுக்கு வருவாய் வருகிறது என்பதற்காக சட்ட விதிகளுக்கு எதிராக பொது இடத்தில் பொது மக்களை மது அருந்த வைப்பதை நியாயப்படுத்த முடியாது அதை அனுமதிக்கவும் முடியாது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை. பார் குத்தகை வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார், நீதிபதி.

    கடந்த டிசம்பர் 14-ந்தேதி அறிவிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மது பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட குத்தகையை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார். 

    அதோடு, மதுக்கடை பார் டெண்டர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி,
    பார்களில் மது அருந்தியவர்களைப் பொது இடங்களில் நடமாட அனுமதிப்பது குறித்து நீதிபதி வினா எழுப்பினார். பின்பு, பொது இடங்களில் போதையில் இருப்போருக்கு 3 மாதச் சிறைத் தண்டனை, 1000 ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். 

    மதுவிலக்கு! மதுவிலக்கு! என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி சென்னை உயர்நீதி மன்றத்தின் இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....