Friday, March 31, 2023
மேலும்
    Homeவானிலைஇங்கெல்லாம் கனமழை; மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்!

    இங்கெல்லாம் கனமழை; மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம்!

    வறண்ட வானிலை மட்டுமே நிகழ்ந்து வந்த தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை அவ்வப்போது பெய்தது. இந்நிலையில் இன்று சென்னை மண்டல வானிலை மையம், மன்னார் வளைகுடா வளிமண்டல சுழற்சி நிகழுவதாக தெரிவித்துள்ளது.

    chennai vaanilai maiyam

    இன்று தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    chennai-rain

    நாளை டெல்டா மாவட்டங்கள், மதுரை,சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பகுதியில் 8 சென்டிமீட்டர் மழையும், வேதாரண்யம் பகுதியில் ஐந்து சென்டிமீட்டரும், வேளாங்கண்ணி பகுதியில் நான்கு சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. திருத்துறைப்பூண்டி, காரைக்கால், திருக்குவளை பகுதிகளில் மூன்று  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    boat1

    மேலும், வளிமண்டல சுழற்சி காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு நாளை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையத்தால் அறிவுறுத்த படுகின்றனர். 

    சென்னையை பொறுத்தவரை கடந்த வாரத்தைப்போல் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    news

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய...

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள்...