Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஹிஜாப் தடை விவகாரம், தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்!

    ஹிஜாப் தடை விவகாரம், தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்!

    சீருடைகள் தவிர மத அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமாக ஹிஜாப் மற்றும் காவித் துணிகளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்களில் அணியக் கூடாது என கர்நாடக உயர் நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. 

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் பள்ளி மற்றும் கல்லூரியில் தொடங்கிய இந்த ஹிஜாப் தடையால் அங்குள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த இந்து மாணவர்கள் ஹிஜாப்பை எதிர்க்கும் விதமாக காவித்துணிகளை அணிந்து வந்தது சர்ச்சைக்குள்ளாக்கியது. மேலும் பல கர்நாடக மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போராட்ட வெடிப்பை ஏற்படுத்தியது.

    hijab ban issue protestஇதனால், உடுப்பி மாணவிகள் வழக்கு பதிவு செய்தனர், விசாரணைகளும்  நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று இறுதி தீர்ப்பாக மத அடையாளங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஆடைகள் அணியக் கூடாது என தீர்ப்பை அளித்தது கர்நாடக உயர் நீதிமன்றம். 

    மேலும் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து நேற்று  தமிழ்நாட்டில், 

    hijab ban issue protest in tamilnadu

    • இந்த தீர்ப்பு வந்தவுடன், சென்னையில் உள்ள புதுக் கல்லூரி (new college) மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். மேலும் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்தையும் எழுப்பினர். 
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம் பட்டினத்தில் உள்ள காதீர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    • நாகூர் தர்காவின் முன் இந்திய இஸ்லாமிய அமைப்பு மாணவர்கள் ஒன்றுக் கூடி கர்நாடக உயர் நீதி மன்றத்தின் ஹிஜாப் தடை என்ற தீர்ப்பிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    மேலும் பல இஸ்லாமிய அமைப்புகள்,  போராட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபடப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருகின்றன. குறிப்பாக தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....