Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது! நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்பு!

    தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது! நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்பு!

    மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு இன்று கூடியது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர். 

    கடந்த மாதம் 18 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து மறுநாள் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கைகள் கடந்த ஆண்டைப் போலவே காகிதமில்லாத முறையில் நடைபெற்றது. மேலும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது அமைச்சர்களும் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் 24 ஆம் தேதி நிறைவடைந்தது. 

    இந்நிலையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. இந்த மானிய கோரிக்கைகளுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை மொத்தம் 22 நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரிதியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. 

    முதல் நாளான இன்று நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்திற்கான பதில்களை அமைச்சர் துரைமுருகன் இறுதியில் அளிப்பார். அனைத்து எதிர்க் கட்சிகளும் நீட் தொடர்பான கேள்விகளையும் சொத்து வரி உயர்வை திரும்பக் பெற கோரியும் மகளிர் மாத உதவித் தொகை, பழைய ஓய்வு ஊதியம் ரத்து, சட்ட ஒழுங்கு மற்றும் திமுக அளித்த வாக்குறுதிகளை குறித்தும் விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் வெளிநடப்பு செய்ய பல்வேறு திட்டங்கள் தீட்டி உள்ளதாக தகவல்கள் தெறிவிக்கின்றன. 110 ஆவது விதியின் கீழ் கேள்வி நேரம் மற்றும் முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    மேலும் இந்த மானியக் கோரிக்கைகளுக்கான கூட்டத் தொடர் விவாதம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....