Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவேகமெடுக்கும் கொரோனா; தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் ஆனால் ....?

    வேகமெடுக்கும் கொரோனா; தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் ஆனால் ….?

    ‘கொரோனா ஓய்ந்ததா என்ற பதிலுக்கு விடை என்பதே கிட்டாது ’ என்ற உணர்வுதான் உலக மக்களிடம் உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, உலக மக்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. தொற்று பரவல், ஊரடங்கு அமல், உயிரிழப்புகள், தொழில் முடக்கம் என கொரோனா சார்ந்த அனைத்தும் மக்களை வாட்டி வதைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும். 

    2020 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா தாக்கம், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு கடந்த சில மாதங்களாகத்தான் படிப்படியாக குறைந்து வந்தது. சமீப வாரங்களாக கொரோனா தாக்கம் பெரியதாய் இல்லை என்ற நிலையை இந்தியா கொண்டிருந்தது. 

    ஆனால், தற்போதோ டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை சற்றே உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஆங்காங்கே மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்தமட்டில், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதுவரையில் கொரோனா தொற்று பாதிப்புகள் பெரிய அளவில் தமிழகத்தில் இல்லை என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் இராதகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

    மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரோனா தொற்று தொடர்பான முன்னறிவிப்புகளை எடுக்கும்படியும், பொதுமக்கள் முகக்கவசம் அணிகிறார்களா என்று கண்கானிக்கும்படியும் இராதகிருஷ்ணன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். 

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பரவல் அதிகரிக்கும்பட்சத்தில் நிலைமைக்கு ஏற்ப மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முகக்கவசத்தை பொறுத்தமட்டில் தமிழகத்தில் கட்டாயம் என்றும், அதேசமயம் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அபாரதங்கள் விதிக்கப்படாது என்றும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் உயிர்களின் பாதுகாப்பு கருதி முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் இராதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். 

    கொரோனா பரவல் அதிகரித்தாலோ, மக்கள் அலட்சியமாய் இருந்தாலோ அபாரதம் விதிக்கப்படும் நிலை வருமென்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படியுங்கள், ஆளுநருக்கு எதிரான தாக்குதல்; கண்டித்து திமுகவை சாடிய ஓபிஎஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....