Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சென்னையின் முக்கிய சாலைக்கு கருணாநிதியின் பெயரா ? : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

    சென்னையின் முக்கிய சாலைக்கு கருணாநிதியின் பெயரா ? : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

    சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலைக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று நெடுஞ்சாலைத் துறையின் 75வது ஆண்டு பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

    நெடுசாலைத்துறையின்  75 ஆண்டுகள் நிறைவையொட்டி, பவள விழாவானது சென்னை கிண்டியில் உள்ள நெஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

    நெடுஞ்சாலை துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட பணிகள் ஆகியவற்றின் புகைப்படத்தை முதல்வர் பார்வையிட்டார். மேலும், ஓய்வு பெற்ற பொறியாளர்களுக்கு நினைவு பரிசும் வழங்கினார். 

    மேலும், விழாவில் பேசிய அவர் சாலைகளை நமக்கு தரமாக அமைக்க வேண்டும். சாலைகள் சரியில்லை என்றால் மக்கள் அரசைத்தான் முதலில் திட்டுகிறார்கள். அதுவே, சரியாக இருந்தால் முதலில் நம்மைத்தான் நன்றாக பாராட்டுகிறார்கள். எனவே, எல்லாம் நம் கையில்தான் உள்ளது என்று பேசியுள்ளார். 

    நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் தான், சாலைகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதனை சரி செய்யத்தான் 5 சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் 184 பணியிடங்களை உருவாகியுள்ளோம் என்று பேசியுள்ளார் முதல்வர். சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது மற்றும் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

    மேலும் அவர், இன்று நெடுஞ்சாலைத்  துறைக்கு கிடைத்து வரும் பெருமைக்கு கருணாநிதி தான் காரணம் என்றும், அதனால் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயரை இடுகிறேன் என்றும் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

    கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்ட உதவி பேராசிரியர்- போராடும் மாணவர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....