Monday, March 27, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று தமிழக நிதிநிலை அறிக்கை 2022-2023 தாக்கல்: முக்கிய திட்டங்கள் எதிர்ப்பார்ப்பு!

    இன்று தமிழக நிதிநிலை அறிக்கை 2022-2023 தாக்கல்: முக்கிய திட்டங்கள் எதிர்ப்பார்ப்பு!

    தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அபோது ஆகஸ்ட் 13 தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அப்போது காகிதம் இல்லாத முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் இன்று காலை பத்து மணிக்கு தொடங்கியது. 

    இந்த முறையும் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.  திமுக ஆட்சிப் பொறுப்பேற்று முழு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதன் முதலில் தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. 

    இப்போது தாக்கல் செய்யப்படுகின்ற அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன் அளித்த வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம், மாதந்தோறும் மின்கட்டணம் உள்ளிட்ட திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

    நிதிநிலை அறிக்கை கூட்டம்  முடிந்ததும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில், நிதிநிலை அறிக்கைக்கான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று முடிவுகள் இன்று எடுக்கப்படும். 

    மேலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய்ய உள்ளார். இதிலும் முக்கியமாக விவாசயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...