Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஆன்மிகம்முருகன் எப்படி பிறந்தார் தெரியுமா? தமிழ்க் கடவுள் முருகன் பிறப்பு வரலாறு:

    முருகன் எப்படி பிறந்தார் தெரியுமா? தமிழ்க் கடவுள் முருகன் பிறப்பு வரலாறு:

    பெற்ற அப்பனுக்கு பாடம் புகட்டியவன், தமிழ் வளர்த்த அகத்தியருக்கு தமிழ்ச் சொல்லிக் கொடுத்தவன். குறிஞ்சி நிலத் தலைவன் குகன் அவனே தமிழ் முதற்கடவுள் முருகன். இந்து கடவுள்களான சிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டாம் மகனாக பிறந்தவர் தான் முருகன். 

    பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தட்சணையை தான் சிவபெருமான் மணந்தார். ஒருநாள் தட்சன் நடத்திய முக்கியமான யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் சிவன் கோபப்படவில்லை, அவரின் மனைவி கோபமுற்று தாட்சாயினி அக்கினியில் குதித்து உயிர் துறந்தார்.

    மனைவி இறந்ததால் கோபமுற்ற சிவன் தனது அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாக சாலையையும் தட்சனையும் அழித்துவிட்டார். பின்பு நீண்ட காலம் தியானத்தில் அமர்ந்தார். அப்போது தாரகன் என்ற அசுரன் பிரம்மனிடம் தவமிருந்து எனக்கு யாராலும் அழிவு ஏற்படக் கூடாது அந்த சிவனாரின் புதல்வன் ஒருவனைத் தவிர என்று கேட்டு வரத்தைப் பெற்றார். baby murugan

    இதனால் பயம் கொண்ட தேவர்கள் சிவனை தியான நிலையிலிருந்து எழுப்ப நினைத்தனர். அதற்கு காமதேவனை பலிக்கடாவாக்கி அனுப்பி வைத்தனர். காமதேவன் சென்று எழுப்ப சிவனின் நெற்றிக் கண் கோபத் தீயுக்கு ஆளானார். காமதேவன் அக்னி தீப்பொறிகளால் சாம்பல் ஆனார். 

    sivan and muruganஅதிலிருந்து வந்த ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் உள்ள தாமரை மலர்களில் விழுந்தது. அதை எடுத்து கங்கா தேவி கார்த்திகைப் பெண்கள் அறுவருக்கும் கொடுத்து வளர்க்க சொன்னார். அதன்பேரில் கார்த்திகைப் பெண்கள் கார்த்திகேயனை வளர்த்தனர். இதனால் தான் இவர் ‘கார்த்திகேயன்’ என்று பெயர் பெற்றார். 

    பின்பு கார்த்திகை நட்சத்திரத்தில் பார்வதி தாயார் ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஒரு குழந்தையாக மாற்றினார். இதனால் ஆறு முகங்கள் கொண்ட முருகன் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அப்பன் சிவனைப் போலவே முகத்தில் மூன்று கண் என பதினெட்டு கண்களை உடையவர் முருகன்.   

    கீழே உள்ளதையும் காணுங்கள்!

    சிவன் பார்வதிக்கு நடந்த திருமணம் பற்றிய வரலாறு !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....