Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவாஞ்சை, அன்பு, சுட்டித்தனம் என பலரையும் கவர்ந்த சுரேஷ் ரெய்னா! - இரசிகர்கள் வருத்தம்!

    வாஞ்சை, அன்பு, சுட்டித்தனம் என பலரையும் கவர்ந்த சுரேஷ் ரெய்னா! – இரசிகர்கள் வருத்தம்!

    சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்றாலும், தமிழக மக்களுக்கு ரெய்னாவின் மீது பிரத்யேக பிரியம் உண்டு! குறிப்பாக ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியதில் இருந்துதான் ரெய்னாவின் மீதான அன்பு ரசிகர்களுக்கு அதிகமானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரெய்னா விளையாடிய போட்டிகள் இன்றும் பலராலும் வியந்து பேசப்படுபவை!

    சுரேஷ் ரெய்னாவின் குண நலன்கள் பல இளைஞர்களை செம்ம என்ற வார்த்தையை தொடர்ந்து உச்சரிக்க செய்யும் வகையிலேயே அமைந்திருக்கிறது. சக இந்திய வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதிலும், அணியில் துவண்டு இருக்கும் சக வீரர்களை குதூகலப்படுத்துவதிலும் ரெய்னாவிற்கு நிகர் ரெய்னாவே!

    Cricket (1)

    நம் அணி வீரர்களுக்கு மட்டும் அல்ல, பிற அணி வீரர்களுக்கும் போட்டிக்களத்தில் கூட துரதிஷ்ட துயரங்கள் அல்லது அசவுகரியங்கள் நடக்க முதல் ஆளாய் அவர்களிடம் சென்று விசாரிப்பது, ஆறுதல் செய்வது ரெய்னாவின் குணநலன்களில் மிக முக்கியமான ஒன்றாகும்!வாஞ்சை, அன்பு, சுட்டித்தனம், சகோதரத்துவம் என பலரையும் தன் குணநலன்களால் கவர்ந்தவர், சுரேஷ் ரெய்னா!

    SR1

    அன்பு, உதவுவதல் என ரெய்னாவின் ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம், தேடி வரும் சண்டைகளை சச்சரவுகளை ரெய்னா தீர்க்கும் விதம் அனலாய் இருக்கும். எளிதில் உஷ்ணமாகாத ரெய்னா உஷ்ணம் ஆகிவிட்டால் விளையாட்டின் மூலமோ, உற்சாகத்தின் மூலமோ, அனலாய் பதில் தருவார்.

    சுரேஷ் ரெய்னா, தமிழக ரசிகர்களால் iplஎன்று அழைக்கப்படுவது வெறும் பட்டத்திற்காக அல்ல அது உணர்வுகளின் ஆதியில் இருந்து பிறப்பது. அந்த உணர்வை ஒவ்வொரு முறை சின்ன தல என்று ரெய்னா அழைக்கப்படும்போதும் நாம் புரிந்துக் கொள்ளலாம். தமிழகத்தில் செல்ல பெயர் சின்ன தல என்றால், மொத்த ஐபிஎல்-லிற்கும் அவரின் செல்ல பெயர், மிஸ்டர் ஐபிஎல் என்பதே!

    raina

    ஆம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடையில் இருந்த இரண்டு  சீசன்களை தவிர்த்து, ஐபிஎல் தொடங்கிய 2008லிருந்து மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் சின்ன தல ரெய்னா. சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் அவரது பங்களிப்பு இருந்திருக்கிறது என்பது எவராலும் மறுக்க முடியாத விடயம். சுரேஷ் ரெய்னா அவர்கள், ஐபிஎல்லில் 205 போட்டிகளில் ஆடி இதுவரை 5528 ரன்களை குவித்துள்ளளார். 

    ஐபிஎல் 2008-ல் 421 ரன்களை அடித்த சுரேஷ் ரெய்னா, அடுத்த சீசனில் 434 ரன்களை அடித்து மீண்டும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  2008 இல் ஆரம்பித்து 2014 சீசன் வரை சிஎஸ்கே அணிக்காக ஒவ்வொரு ஆண்டும் ரெய்னா 400 ரன்களைக் குறைந்த பட்சமாக அடித்தார்.

    suresh-raina

    சுரேஷ் ரெய்னாவின் குண நலன்கள், ஆட்டத்திறன் என்று அவரின் விளையாட்டை ரசிக்க பல ரசிகர்கள் தற்போதும் உள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு போகாமல் போனது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரை அந்த அதிர்ச்சியில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மீளவில்லை!

    Suresh-Raina-

    ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 2020 சீசனில் இருந்து விலகினார். பிறகு, ஐபிஎல் 2021-ல் அணிக்கு திரும்பினார். இருப்பினும், 12 ஆட்டங்களில் 160 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார். இதனால் தான் எந்த அணியும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை என்று அறியப்பட்டாலும், எவராலும் ரெய்னாவை  ஏலத்தில் எடுக்காததை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

    பல காரணங்கள் கூறப்பட்டாலும் சுரேஷ் ரெய்னா எப்போதும் இந்திய ரசிகர்களுக்கு குறிப்பாக தமிழக வீரர்களுக்கு பிடித்தமானவர்தான்! சின்ன தல தான்! மிஸ்டர் ஐபிஎல் தான்! என்று ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சுரேஷ் ரெய்னா மீண்டும் ஐபிஎல் விளையாடி தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு ஏதும் விந்தையாகவாது அமையுமா என்று ரசிகர்கள் கூறிய படி இருக்கின்றனர்.

    Suresh-Raina

    உண்மையில், சுரேஷ் ரெய்னா காலத்திற்கு போற்றப்படக்கூடிய ஒரு வீரர் தான்! அவர் சின்ன தல தான் , அவர் மிஸ்டர் ஐபிஎல் தான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....