Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஇந்த கோடையில் மோர்க்குழம்பை இப்படி செய்து பாருங்க! சுவை நாக்கில் நடனமாடும்!

    இந்த கோடையில் மோர்க்குழம்பை இப்படி செய்து பாருங்க! சுவை நாக்கில் நடனமாடும்!

    கோடையில் சாப்பிட சிறந்த உணவுகள் நிறைய இருக்கின்றன. அவற்றில், மிகக் குளுமையானது இந்த கோடைக்காலம். மோர்க்குழம்பு சோறும் வத்தலும் சுவையான இணை தான் எப்போதும். வாருங்கள் மோர்க்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

    தேவையான பொருட்கள்: 

    1. தயிர்- கால் கப் 
    2. சின்ன வெங்காயம்- கால் கப் 
    3. தேங்காய் துருவல்- மூன்று தேக்கரண்டி
    4. பச்சை மிளகாய்- இரண்டு 
    5. சீரகம்- கால் தேக்கரண்டி 
    6. இஞ்சி- ஒரு குட்டி துண்டு 
    7. கடலைப் பருப்பு- இரண்டு மேசைக்கரண்டி 
    8. கருவேப்பிலை- இரண்டு இணுக்கு 
    9. மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி 
    10. வரமிளகாய்- ஒன்று 
    11. உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு 

    செய்முறை: 

    • கடலைப் பருப்பை, அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் துருவிய தேங்காய், ஒரு துண்டு இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு சிறிதளவு சேர்த்து, மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • தயிரை கட்டியாக இல்லாமல் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன்  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மீண்டும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். 
    • அரைத்து வைத்த விழுதை, தண்ணீர் சேர்த்து, கலக்கிய மோருடன் சேர்த்து, கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • பிறகு தேவையான அளவு தேங்காய் எண்ணெய்(சுவை கூடும் என்பதால்) சேர்த்து, அதில் கால் தேக்கரண்டி கடுகு, சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். சிறிது வதங்கியவுடன் சீரகம் கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள், கருவேப்பிலை இரண்டு இணுக்கு உருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். 
    • இரண்டு, மூன்று நிமிடங்கள் நன்றாக வதங்கியவுடன் அதில், மோரை சேர்க்க வேண்டும். 
    • பின்பு தேவையான அளவு, உப்பு சேர்த்து கொதிக்க ஆரம்பித்த உடனே இறக்கி வைத்திட வேண்டும். 
    • அவ்வளவு தான்! சுவையான மோர்க்குழம்பு சாப்பிடத் தயார். வடித்த சோறு, மோர்க்குழம்பு, பொரித்த வடகம் அல்லது வத்தல் சேர்த்து உண்டால் இந்த வெயிலுக்கு சும்மா சில்லுனு இருக்கும்.  

    இந்த வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான உணவு, இப்படி செய்து சாப்பிடுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....