Sunday, March 26, 2023
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்கோடையின் கொடைக் கனி மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

    கோடையின் கொடைக் கனி மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

    பொதுவாக கோடை காலம் என்றதும் மாம்பழம் தான் அதிக நினைவுக்கு வரும். பலபேருக்கு மாம்பழம் என்றாலே பிடிக்கும். அப்படியிருக்க சிலர் சொல்வர் மாம்பழம் அதிகம் சூடு என்று. அது சிலருக்கு ஒவ்வாமையை வேண்டுமானால் உருவாக்கலாம் ஆனால் மாம்பழம் உண்மையில் அவ்வளவு சூடு இல்லை. வாருங்கள் தெரிந்துக் கொள்வோம் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை… 

    • மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. 
    • தொடர்ந்த இடைவெளியில் மாம்பழம் சாப்பிட்டு வருவதால் நமது சருமத்தினை புதுப்பிக்கவும் செய்கிறது பளபளவென மாற்றி அழகையும் கூட்டி விடுகிறது. 
    • நரம்பு ரீதியான பிரச்சனைகளை சரி செய்கிறது மாம்பழம். 
    • மாம்பழத்தில் வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்து உள்ளதால் இது உங்களின் வயிற்றை நிச்சயம் நிரப்பும். இதன் காரணமாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. 
    • மாம்பழத்தில் வைட்டமின் எ சத்து இருப்பதால் இது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. 
    • மாம்பழத்தில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் இது சிறுநீரக பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. 
    • மேலும் மாம்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்த அழுத்தம் சம்மந்தமான பிரச்சனைகளைக் குறைக்க வல்லது. 
    • மாம்பழம் உடலில் இரத்தம் உருவாவதை அதிகப்படுத்துகிறது. 
    • கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைக் வெகுவாக குறைகிறது. குறிப்பாக கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண்  சம்மந்தமான இடையூறுகளை தவிர்க்கிறது மாம்பழம். 
    • பல் மற்றும் ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்க கூடியது. 
    • உடலில் உள்ள புரதச் சத்துக்களை உடைக்க உதவுகிறது. மாம்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
    • மிக முக்கியமாக புற்று நோய்க்கு எதிராக மாம்பழத்தில் உள்ள ஆக்சிஜினேற்ற மூலப்பொருள்கள் போராடுகிறது. 
    • மாம்பழத்தில் அதிக இரும்புச்சத்து இருப்பதால் இரத்தசோகை உடையவர்கள் இதை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்ல பயன்களைப் பெறலாம். 
    • நமது கவனத்தையும் நினைவாற்றலையும் அதிகப்படுத்த மாம்பழம் உதவுகிறது. 
    • கோடைக் காலங்களில் உருவாகும் சூட்டினைத் தணிக்க மாம்பழம் சிறந்த பழம் ஆகும். இது உங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். 
    • உட்கொள்ள மட்டும் அல்ல, மேல் பூச்சாக சருமத்திற்கு பயன்படுத்தினாலும் சிறந்த பயன்களைப் பெறலாம். குறிப்பாக முகத்தைப் பொலிவாக மாற்றவும் அழுக்கு மற்றும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் உதவும். 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...