Monday, March 18, 2024
மேலும்
    Homeவானிலைதொடங்கியது கத்திரி வெயில்: அதிகபட்ச வெப்பநிலை எந்த மாவட்டத்தில்?

    தொடங்கியது கத்திரி வெயில்: அதிகபட்ச வெப்பநிலை எந்த மாவட்டத்தில்?

    கோடை வெயில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் இன்று தொடங்கி, வருகின்ற மே மாதம் 28 ஆம் தேதி முடிவடைகிறது.

    அக்னி நட்சத்திர நாட்களில், கோடை வெயிலின் தாக்கமானது உச்சத்தில் இருக்கும், என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இதனால், ஏற்படும் அதிகபட்ச வெயிலானது 25 நாட்கள் வரை இருக்கும். ஆகவே, தேவையின்றி மக்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பது தான் சிறந்தது.

    தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 10 மாவட்டங்களில், வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெப்பநிலை பதிவானது. பொதுவாகவே, வேலூர் மாவட்டத்தில் பாறைகள் அதிகளவில் இருப்பதால், அங்கு வெப்பநிலை எப்போதும் அதிகமாக இருக்கும். மேலும், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், தமிழ்நாட்டில் சில இடங்களில், வெப்பநிலையானது தற்போது இருப்பதைக் காட்டிலும் அதிகபட்சமாக 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

    மேலும், நடப்பாண்டில் கத்திரி வெயில் இன்று மே 4 முதல் மே 28 வரை, மொத்தமாக 25 நாட்கள் நீடிக்கும். கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பநிலை, சில இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும். குறிப்பாக, வேலூர் மற்றும் திருத்தணி உள்ளிட்ட சில மிக முக்கிய நகரங்களில், வெப்பநிலையானது, 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்ட வாய்ப்புள்ளது என்றும், பகலில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கத்திரி வெயில் ஒருபுறம் ஆரம்பித்தாலும், அந்தமான் பகுதியின் அருகே வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருக்கிறது. இதனால், தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேலும், அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை குறையவும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்தோடு காணப்பட்டது. இதனால், வெயில் குறைந்திருக்க மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர்.

    சாட்டிலைட் இணைய சேவையில் புதிய திருப்பம்: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக ‌அமேசான் “புராஜக்ட் குயிப்பர்”!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....