Friday, March 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 61 பேர் பலி

    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 61 பேர் பலி

    பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 61 பேர் உயிரிழந்தனர். 

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்து இருக்கிறது. 

    இந்நிலையில், அங்குள்ள மசூதி பகுதியில் நேற்று மதியம் முஸ்லிம்கள் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் விழுந்தது. 

    இதையடுத்து அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. 

    இந்த வெடிகுண்டு விபத்தில் 61 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 21 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்தத் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இருக்கும் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    குஜராத்தில் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....