Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்மின்சார வாரிய அதிகாரியின் வித்யாசமான விடுப்பு கடிதம்; சமூக வலைதளத்தில் வைரல்

    மின்சார வாரிய அதிகாரியின் வித்யாசமான விடுப்பு கடிதம்; சமூக வலைதளத்தில் வைரல்

    மின்சார வாரிய அதிகாரியின் இந்த வினோதமான விடுப்பு கடிதம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    பொதுவாக அரசு துறையிலும் அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் விடுப்பு தேவை என்றால் குறிப்பிட்ட சில காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதே சமயம், விடுப்புக்கான காரணத்தை பொறுத்தே விடுமுறைக்கு அனுமதி அளிப்பது வழக்கம். 

    அந்த வகையில் புதுக்கோட்டையில் மின் வாரியத்தில் பணியாற்றும் உதவி மின் பொறியாளர் ஒருவர், தனக்கு ஒருநாள் விடுப்பு கோரி உயர் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. 

    அந்தக் கடிதத்தில், “கடந்த சில வாரங்களாக பணியாளர்கள், வாரியத்தினாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் நடத்தப்படும் விதம் குறித்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால், அதிலிருந்து மீண்டு வந்து வாரிய பணிகளை செவ்வனே தொடரும் வகையில் மன அமைதியை வேண்டி, எனது வீட்டிலேயே அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்ய உள்ளதால், எனக்கு ஒரு நாள் விடுப்பு தருமாறு” கேட்டுக்கொள்வதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். 

    இந்தக் கடிதத்தை நேற்று முன்தினம் அளித்து, நேற்று விடுமுறை கோரி இருந்தார். இந்தக் கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுபோன்ற காரணங்களுக்கு விடுப்பு தர முடியாது என அதனை நிராகரித்தனர். 

    தியானம் செய்வதற்காக விடுப்பு கேட்ட மின்சார வாரிய அதிகாரியின் இந்த வித்யாசமான விடுப்பு கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

    ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித் வசனம் பேசிய சிவகார்த்திகேயன்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....