Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇரிடியம் என்றாலே மோசடி தான்.. அறிவுறுத்தும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு

    இரிடியம் என்றாலே மோசடி தான்.. அறிவுறுத்தும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு

    பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளார். 

    இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக, டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். 

    5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என பல கும்பல்கள் ஆசை வார்த்தைகளை கூறி மோசடியில் ஈடுபடுவதாக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். 

    இந்த இரிடியம் மோசடி தொடர்பாக சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு புகார்கள் வருவதாகவும் கூறினார். 

    இப்படிபட்ட தகவல் கிடைத்தால் உடனே காவல்துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். 

    இரிடியம் என்றாலே மோசடி தான் என்றும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இரிடிய கும்பலிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார். 

    ஒரு பக்கம் கோட்டை மறுபக்கம் பேட்டை.. சுற்றுலாவுக்குப் போக நாமக்கலில் ஒரு இடம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....