Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இலங்கையில் கலவரம் வெடிக்கும் அபாயம் : பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் !

    இலங்கையில் கலவரம் வெடிக்கும் அபாயம் : பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் !

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி, அந்த நாட்டின் அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இலங்கை நாட்டில் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு அந்த நாட்டில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உணவுப்பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வால் அங்குள்ள பொதுமக்கள் பசி, பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல்,மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர் போன்ற எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

    மக்கள் அவற்றை வாங்க நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் அந்த நாட்டின் பெட்ரோலிய நிறுவனம் எரிபொருட்கள் கையிருப்பு இல்லை என்று கூறி மக்களை வரிசையில் நிற்க வேண்டாம் என்று கூறி விட்டது. மின்சாரமும் ஒரு நாளைக்கு 13 மணிநேரம் ரத்து செய்யப்படுகிறது. 

    இதனால் கடும் அதிருப்தி மற்றும் அவதிக்குள்ளான மக்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்புவில் உள்ள இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டின் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக 45 பேர் இலங்கை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இலங்கை முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. 

    இந்நிலையில் மக்களின் இந்த நிலைமையை சுட்டிக்காட்டி அந்நாட்டின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்கத்தின் அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

    இதுகுறித்து அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், மக்கள் எரிபொருட்கள் வாங்க வரிசையில் நிற்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. எனவே, அமைச்சர் பதவியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுஜன பெனரமு பொல்லன்றுவை மாவட்டத் தலைவர் பதவியையும் வரும் மே 1ஆம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆளுங்கட்சி அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பு அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    சில நாட்களுக்கு முன்பாக மஹிந்த ராஜபக்சேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நான் பதவியை விட்டு விலக மாட்டேன். அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று கூறி சர்ச்சையை கிளப்பி விட்டிருந்தார். இது மக்களிடையே கடும் கோபத்தை கிளப்பி விட்டிருந்தது. 

    தற்பொழுது இலங்கையின் சில பகுதிகளில் வன்முறைகளும், போராட்டங்களும் வெடித்து வருகிறது. இந்த நிலை தொடருமாயின் மேலும்  போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் தற்போதைய  அரசாங்கம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....