Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தமிழக மீனவர் படகுகளை ஏலம் விட்டது இலங்கை அரசு !!

    தமிழக மீனவர் படகுகளை ஏலம் விட்டது இலங்கை அரசு !!

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வருவதாக இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது குற்றம் சாட்டி வருகின்றது. இதனால் தமிழக மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும்  இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டது. இந்த படகுகளை மீட்டுத்தருமாறு தமிழக மீனவர்களும், இந்தியா அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். 

    tamil people

    மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று தமிழகம் முழுவதும் படகுகளை மீட்கக்கோரி கோரிக்கைகள் எழுந்து வந்தன.ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. 

    tamilnadu boats

    இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பணப்பற்றாக்குறை நெருக்கடியால் தமிழக மீனவர் படகுகளை ஏலம் விடப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழக மீனவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 150 படகுகளை இலங்கையில் சிறை வைத்திருந்த நிலையில்,  இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக படகுகளை ஏலம் விடப்படும் என்று அறிவித்தார்.

    tamilan boats

    இந்த தகவல் அறிந்ததும் தமிழக மீனவர்கள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் நேற்று தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப்பட்டன.

    tamil fisherman

     நேற்று யாழ்ப்பாணம் காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 139 படகுகளை மொத்தம் ரூ59,50,000க்கு  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு படகு மட்டும் ரூ13,50,000க்கு விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புத்தளம், நீர்க்கொழும்பு, கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வர்த்தகர்கள் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலத்தில் எடுத்துள்ளனர். தங்களது வாழ்வாதரமான மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடப்பட்டுள்ளதை அறிந்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....