Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்! மூவர் பலி!

    இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்! மூவர் பலி!

    இலங்கை அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களின் மீது  இலங்கை காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

    இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இலங்கையில் உள்ள தற்போதைய அரசு தான் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் ராஜபக்சே குடும்பத்தை பதவி விலகக் கோரி மாபெரும் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்புவையும் கண்டியையும் இணைக்கும் ரம்புக்கனா ரயில் தண்டவாளத்தின் முன்பு நின்று, இரயில் மறியல் போராட்டத்தில் 8 மணி நேரத்தையும் கடந்து போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை தீயிட்டு கொளுத்தி போராட்ட முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர், இவர்களின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தடுக்க முயற்சித்துள்ளனர். 

    மேலும் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரியை, போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்த முயன்றதாக தெரிகிறது. இதைத் தடுக்க முயன்ற காவலர்களின் மீது, போராட்டக்காரர்கள் கற்கள் எரிந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தான், துப்பாக்கிச் சூட்டினை கையில் எடுத்து போராட்டக்காரர்களை கலைத்ததாக காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த சம்பவத்தில், மூன்று பேர் பலியாகி உள்ளனர். காவல் அதிகாரிகள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ரம்புக்கனா பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கு தீர்வு காண இலங்கை மனித உரிமைகள் ஆணையம், இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்த மூன்று பேர் தலைமையிலான குழுவையும் அமைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....