Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பசியால் வாடும் மக்கள்! அத்தியாவசிய பொருள்களுக்காக பல மணி நேரம் காத்திருப்பு!

    பசியால் வாடும் மக்கள்! அத்தியாவசிய பொருள்களுக்காக பல மணி நேரம் காத்திருப்பு!

    இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உருவான இந்த பின்னடைவு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் இலங்கையின் பண மதிப்பையும் வெகுவாக குறைத்துள்ளது. இதனால் மக்களின் அத்தியாவசிய பொருள்களான பால், பேரிச்சை போன்ற பொருள்கள் அத்தியாவசியமற்றவை பட்டியலில் சேர்த்தது இலங்கை அரசு. மக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன. பெட்ரோல் விலை ரூபாய் 283, டீசல் விலை ரூபாய் 176 விற்கப்படுகிறது. 

    சமையல் எரிவாயு வாங்குவதற்காக இரண்டு வாரங்களுக்கு மேலாக உணவு தண்ணீர் மறந்து வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் எரிவாயு இல்லை என தெரிவித்ததும் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிகழ்வு இன்று இலங்கை ரத்கமவில் நடைபெற்றது. 

    அங்கிருந்த மக்கள் கூறியதாவது, “பசியுடனும் பட்டினியுடனும் இரண்டு வாரங்களாக காத்துக் கிடந்தோம், அப்போதெல்லாம் எரிவாயு வரும் என்று கூறினர், ஆனால் இப்போது இல்லை என்கின்றனர். எங்களுக்கு டோக்கன்கள் கூட வழங்கப்பட்டது” என்றனர். மேலும் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களை சமாதானம் செய்து வருகின்றனர். 

    இது மட்டும் அல்லாமல் இலங்கையில் பலப் பகுதியில் இதே நிலை தான் நீடிக்கிறது. உணவுப் பொருளின் விலை உயர்வால் பசியும் பட்டினியாக வாடி உள்ளனர் மக்கள். அத்தியாவசிய பொருள்களை வாங்க பல மணி நேரம் மட்டுமல்ல, பல நாட்களாக வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். 

    இதனிடையில் தவறான முடிவுகளை எடுத்து மக்களை வீதிகளுக்கு வர வைத்துள்ளீர்கள் என இலங்கை எதிர்கட்சித் தலைவர்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

    இலங்கையின் இந்த நிலைக்கு காரணமாக சீனா இலங்கையில் செய்த முதலீடு தான் காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள் பலர். மேலும் இதனால் தான் வேலை செய்தும் மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறுகின்றனர் மக்கள்.  இலங்கை அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாளை நடத்தப் போவதாக முன்பே அறிவித்திருந்தது. இருப்பினும் பல கட்சிகள் இந்த அழைப்பை புறக்கணித்துள்ளது, தெளிவான முடிவுகள் எடுக்கப்படுமா அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்குமா என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....