Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை எதிர்க்கட்சிகளின் சக்கர வியூகம்! கவிழப் போகிறதா ராஜபக்சே அரசு?

    இலங்கை எதிர்க்கட்சிகளின் சக்கர வியூகம்! கவிழப் போகிறதா ராஜபக்சே அரசு?

    இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவர இருக்கின்றன. 

    இலங்கையில், மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவி வருவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்கள், ஒருவேளை உணவிற்கு கூட வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ராஜபக்சே குடும்பம் தான் என்றும் அவர்களை பதவி விலக கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனையடுத்து ராஜபக்சேவின் 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. இருப்பினும், அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகியே ஆக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

    இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள காலிமுகத்திடலில், போராட்டமானது வலுப்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகரும் பதவி விலக உள்ளார். இந்நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இதில் துணை சாபநாயகருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 

    ஏற்கனவே மகிந்த ராஜபக்சே, சிறப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய முன்னரே அனுமதி பெற்றார். இவர், தனது ராஜனாமாவைத் தான் அறிக்கையாக வெளியிடப் போகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன. 

    இந்நிலையில், ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ஆவணங்களை, எஸ்.ஜே.பி கட்சியானது நேற்றே சபாநாயகரிடம் அளித்துள்ளது. மேலும் விரைவில் இதன்மீதான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர இருக்கின்றன. 

    இதனால் இலங்கையில், மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் என்னவென்ன நிகழ்வுகள் நிகழும் என்பது பெரும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

    சிவகங்கை அருகே விவசாயி வீட்டில் கொள்ளை: 40 சவரன் நகை பறிபோன பரிதாபம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....