Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி : நான் பதவி விலக மாட்டேன் என அடம்பிடிக்கும் ராஜபக்சே!

    இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி : நான் பதவி விலக மாட்டேன் என அடம்பிடிக்கும் ராஜபக்சே!

    இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அத்தியாவசிய பொருட்கள் கூட, விலையில் உச்சத்தைத் தொட்டு எளிய மக்களைப் பாதித்து வருகிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 207க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில பொது இடங்களில் அதுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே மீதும், பிரதமர் மஹிந்த ராஜபக்சே மீதும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு பதவி விலகக்கோரி எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அந்நாட்டின் அந்நிய செலவாணியின் மதிப்பு கடுமையாக குறைந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதில் கொடுமை என்னவென்றால் இந்த பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக அங்கு மின்சார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்களுக்கு வழங்க போதுமான மின்சாரம் இல்லை. மின்சாரம்  உற்பத்தி செய்வதற்குத்  தேவையான நிலக்கரியும் அங்கு இல்லை. மேலும், அங்கு நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வாங்க பணமும் இல்லை. 

    மற்ற மின்தயாரிப்பு நிலையங்களை இயக்குவதற்கு போதுமான எரிபொருளும் இல்லை. இத்தகைய நிலையில்தான் அந்த நாடு சிக்கிக்கொண்டு தவிக்கிறது. இதனால் அந்நாட்டில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு பொதுமக்கள் பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்காக தெருக்களில் வரிசையில் நின்று வருகின்றனர். 

    கடந்த மாதம் 7மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், இந்த மாதம் அது 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இன்னும் 750 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் அந்நாட்டு பெட்ரோலிய நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தங்களிடம் பெட்ரோல் இல்லை என்றும் இதுவரை வந்த பெட்ரோலுக்கே பணம் கொடுக்க இயலாத நிலை உள்ளது என்றும் கூறியுள்ளது. இதனால் மக்களை தெருக்களில் நிற்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. 

    அங்குள்ள மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இனிமேல் இந்தியா கொடுக்க போகும் 1 பில்லியன் டாலர் பணஉதவி மற்றும் நிலக்கரியை நம்பியே அந்நாட்டு அரசாங்கம் உள்ளது. 

    நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு சென்ற ஆட்சியாளர்களை பதவி விலகக்கோரி மக்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். இதனை எதிர்கட்சிகளும் முன்மொழிந்து வருகின்றன. 

    இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, எனக்கு இன்னும் பதவிக்காலம் உள்ளது.நான் பதவி விலக மாட்டேன், அடுத்த தேர்தலில் போட்டியிடும் திட்டமும் உள்ளது என்று கூறியுள்ளார். மக்கள் அவதிக்குள்ளாயிருக்கும் இந்நிலையில் அவரது இந்த பேச்சு அனைவரையும் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....