Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் என்ன நடக்கிறது? பசிப் பட்டினியில் மக்கள்!

    இலங்கையில் என்ன நடக்கிறது? பசிப் பட்டினியில் மக்கள்!

    இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அதிகமாகி உள்ளது. இதனால் சர்வ தேச நாணயங்களின் மதிப்பில் இலங்கையின் ரூபாய் மதிப்பு மிக அதிகமாக குறைந்துள்ளது. கொரானாவில் இருந்து மீண்டு வந்தாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இன்றும் நீடித்துதான் வருகிறது.

    பெட்ரோலின் விலை லிட்டருக்கு 283 ரூபாய்க்கும் டீசல் விலை 176 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. குறுகிய காலத்தில் இந்த விலை உயர்வு மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மின்வெட்டின் நேரமும் கால வரையின்றி நீடிக்கப்பட்டு இருக்கிறது. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் ஒருவேளை உணவை உண்ணவே கடினப்பட்டு வருகிறார்கள். 

    petrol disel drum பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்த இறக்குமதி 367 பொருள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பொருள்களை அத்தியாவசியமற்ற பொருள்கள் பட்டியலில் சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு. இந்தப் பொருள்களில் பால், உணவு மற்றும் பேரீச்சம்பழம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தியாவசியமான பொருள்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்துள்ளனர். 

    மேலும் இந்தப் பட்டியலில் பல வகையான ஆடை இறக்குமதிகளும் இருப்பதால் srilanka dress shop ஜவுளித் துறையும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிய செலாவணியை அதிகம் நம்பி இருக்க முடியாது இன்றும் இதற்கான மாற்று வழிகளை யோசிக்காமல் இலங்கை அரசு இவ்வாறு செய்து வருகிறது என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும் அவற்றைப் பற்றி விவாதிக்கவும் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில் அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தலைமையில் வருகின்ற மார்ச் 23 தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது இலங்கை அரசு. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....