Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசொதப்பியதை, சரி செய்யுமா ஹைதராபாத்? உத்வேகத்துடன் லக்னோ - இன்றைய ஐபிஎல் போட்டி!

    சொதப்பியதை, சரி செய்யுமா ஹைதராபாத்? உத்வேகத்துடன் லக்னோ – இன்றைய ஐபிஎல் போட்டி!

    இந்த முறை ஐபிஎல் தொடர் மிகவும் வேகமாக சென்றுக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு பலரிடத்திலும் காணப்பட்டு வருகிறது. வேகமாக சென்றுக்கொண்டிருக்கும் 15 ஆவது ஐபிஎல் தொடரில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் இன்று மோதிக்கொள்கின்றன.

    சன் ரைசர்ஸ் 

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் சந்தித்த தோல்வியென்பது மிகவும் மோசமானது. பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் ஹைதராபாத் அணி கெட்டிக்காரர்கள் என்ற சொல்லாடலை முதல் போட்டி உடைத்துவிட்டது. பேட்டிங், பவுலிங், ஃபில்டிங் என அனைத்திலும் சொதப்பிய ஒன்றாகவே ஹைதரபாத் அணி தனது முதல் போட்டியில் விளையாடியது. 

    கடந்த போட்டியின் போது அணியின் முதல் நான்கு பேட்ஸ்மென்களும் பெற்ற ரன்களை கணக்கிட்டால் வருவது 11 ரன்கள் மட்டுமே. இப்படியான தொடக்கம் ஹைதராபாத் அணியை வெகுவாகவே பாதித்திருக்கும். அப்பாதிப்பை கலைந்து அதற்கான தீர்வுடன் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் களமிறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    மேலும், எப்போதும் பந்துவீச்சில் பலம் பொருந்திய அணி என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஹைதராபாத் அணி இன்றையப் போட்டியின் மூலம் அப்பெயரை தக்கவைத்துக் கொள்கிறதா என காணவும் பலர் ஆர்வமாக உள்ளனர். 

    சூப்பர் ஜெயிண்ட்ஸ் 

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை பொறுத்தவரையில், நடப்பு சாம்பியனான சென்னையை தோற்கடித்த உத்வேகத்தில் இப்போட்டியில் களமிறங்க உள்ளது. உத்வேகத்தில் களம் கண்டாலும் பந்துவீச்சில் லக்னோ அணி இன்னும் வலுப்பெற வேண்டிய தேவை உள்ளதாகவே தோன்றுகிறது. 

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக எதிரணிகள் வியூகங்கள் அமைப்பது சற்று கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. காரணம்,  லக்னோ அணி இதுவரை இரு போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளது. இவற்றை வைத்துக்கொண்டு முற்றிலுமாய் எடை போடுவது இக்கட்டான சூழலில் கொண்டுப்போய் முடித்துவிடும் என்பது எதிரணிகளுக்குத் தெரியும். 

    டி.ஓய்.பாட்டில் மைதானம் 

    இன்றையப் போட்டியானது, நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.  டி.ஓய்.பாட்டில் மைதானத்தை பொறுத்தவரை கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

    டி.ஓய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் சில போட்டிகளிலும், அதிக விக்கெட்டுகள் சில போட்டிகளிலும் எடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆதலால் மைதானத்தின் தன்மை யாருக்கு சாதகம் என்று சொல்வதில் குழப்பம் நேருகிறது. அதே சமயம், வேகப்பந்துவீச்சாளர்களை காட்டிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானம் கைக்கொடுக்கும் என்று கூறப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....