Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்தியர்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்த அமெரிக்காவின் தீர்ப்பு..

    இந்தியர்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்த அமெரிக்காவின் தீர்ப்பு..

    H1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

    அமெரிக்காவில் ’ Save Jobs USA’ என்ற அமைப்பு  H-4 விசா வைத்திருப்போரின்  வேலை வாய்ப்பை அங்கீகரிக்கும் ’ ஒபாமா கால விதிமுறைகளை’ தள்ளுபடி செய்யும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. H-4 விசா என்பது H1B விசா வைத்திருப்பவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு செல்லும் வாழ்க்கைத் துணைகளுக்கு அளிக்கப்படும் விசா. 

    H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு இந்த வழக்கை அமேசான், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்த்த நிலையிலும் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி தன்யா சுட்கான் வழக்கை தள்ளுபடி செய்தார்.

    இந்த தீர்ப்பில், ‘H-4 விசா வைத்துள்ளோரும் அமெரிக்காவில் தங்கி வேலைவாய்ப்பை பெறுவதற்கான அங்கீகாரத்தை அளிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அரசாங்கத்திற்கு நாடாளுமன்றம் வெளிப்படையாகவே அளித்துள்ளது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் ஆறுதலை அளித்திருக்கிறது. H-1B விசா வைத்திருக்கும் பணியாளர்களின் வாழ்க்கைத் துணைகளில் இதுவரை 1,00,000 பேருக்கு அமெரிக்காவில் பணி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மூதாட்டியை அரை நிர்வாணமாக ஓட வைத்த மின்வாரிய ஊழியர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....