Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புகாரசாரமான சிக்கன் தொக்கு.. ஒரு தடவை செஞ்சு பாருங்க அப்புறம் விடவே மாட்டீங்க!

    காரசாரமான சிக்கன் தொக்கு.. ஒரு தடவை செஞ்சு பாருங்க அப்புறம் விடவே மாட்டீங்க!

    தோசைக்கும், சப்பாத்திக்கும் நல்ல இணையாக சிக்கன் தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம். 

    தேவையான பொருள்கள்: 

    1. சிக்கன்- ½  கிலோ 
    2. வெங்காயம்- 2 எண் 
    3. தக்காளி- 3 எண் 
    4. பட்டை- 2 எண் 
    5. லவங்கம்- 2 எண் 
    6. ஏலக்காய்- 3 எண் 
    7. மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி 
    8. கரமசாலா தூள்- 2 தேக்கரண்டி 
    9. மஞ்சள்- ¼  தேக்கரண்டி 
    10. இஞ்சி, பூண்டு விழுது- 2 தேக்கரண்டி 
    11. தயிர்- 2 மேசைக்கரண்டி 
    12. கருவேப்பில்லை- 2 கொத்து 
    13. மல்லித்தழை- தேவையான அளவு 
    14. உப்பு- தேவையான அளவு 
    15. எண்ணெய்- தேவையான அளவு 

    செய்முறை:

    • சிக்கன் தொக்கிற்கு எலும்பு இல்லாத அரை கிலோ சிக்கனை சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • பிறகு அதனுடன், சிறிது உப்பு, மஞ்சள் கால் தேக்கரண்டி, தயிர் 2 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து, ஒரு மணி நேரம் போல் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும். 
    • ஒரு கடாயில், நல்லெண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி விட்டு, அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் கருவேப்பில்லை 2 கொத்து உருவி சேர்த்து வதக்க வேண்டும். 
    • இதைத்தொடர்ந்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நடனராக வதக்க வேண்டும். 
    • அதன்பின் அதில், மிளகாய்த்தூள், கரமசாலாதூள் சேர்த்து, நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு, அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அப்போது, எண்ணெய் தனியாக பிரிந்து தெரியும். 
    • பிறகு, நாம் ஊறவைத்த சிக்கனை எடுத்து, நீர்வடித்து அதில் சேர்க்க வேண்டும். 
    • பின்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் சிக்கனை வேக விட வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். 
    • சிக்கன் வெந்தவுடன் அதன் மேல் சிறிது மல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான கார சாரமான சிக்கன் தொக்கு தயார்.

     சத்து: எலும்பு இல்லாத சிக்கனில் புரத சத்தும், கலோரியும் அதிகமாக காணப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular