Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஆன்மிகம்பிரதோஷ நாட்களின் சிறப்பும், வழிபடும் முறைகளும்..

    பிரதோஷ நாட்களின் சிறப்பும், வழிபடும் முறைகளும்..

    சிவபெருமானுடைய விரதங்களில் மிகவும் விசேஷமான நாட்களாக கருதப்படுவது பிரதோஷம். தேவர்கள் நரை, திரை, பிணி, மூப்பு, போன்ற துன்பங்களை போக்குவதற்காக அசுரர்களுடன் சேர்ந்து  பாற்கடல் கடைந்தனர். அதில் முதலில் விளைந்த விஷத்தை தேவர்கள் இறைவனுக்கு படைக்கும் விதமாக  நம் எல்லாரையும் காக்கும் சிவபெருமானிடம் வந்து நிற்க, பக்தர்கள் கொண்டு வந்ததை எந்தவித தயக்கமுமின்றி அருந்தினார். அவர் அருந்திய ஆலகால விஷத்தை  அன்னை பார்வதி தேவி நிறுத்த ஆலகால விஷமானது சிவபெருமானின் வயிற்றுக்கு  இறங்காமல் கழுத்திலேயே தங்கியிருந்ததால் கண்டம் நீல நிறமாகி நீலகண்டன் எனும் பெயரை பெற்றார். அந்தி சாயும் வேளையில் இந்த நிகழ்வு நடைபெற்றதால் பிரதோஷ வழிபாடும் மாலையிலேயே நடைப்பெறுகின்றது.

    visham

    பிரதோஷம்  வழிபடும் முறை 

    பிரதோஷ தினத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவ பெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடப்பது வழக்கம். இந்த நேரத்தில் நந்தி பகவான் தன் தக்கோலத்தைக் களைத்து சிவ பெருமானை நினைத்து விரதமிருந்து வழிபடுவோரின் கோரிக்கையைக் கேட்டு நிறைவேற்றுவார்.  வளர்பிறை, தேய்பிறை என மாதத்தில் இருமுறை வரக்கூடிய இந்த பிரதோஷ தினத்தில் விரதமிருக்க விரும்புபவர்கள் அன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து வீட்டிலேயே விளக்

    sivan

    கேற்றி சிவ பெருமானை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம். விரதம் இருக்கும் அன்றைய தினம் முழுவதும் ‘ஓம் நமசிவாய’ எனும் மூல மந்திரத்தையும், மற்ற சிவ நாமத்தை ஜெபித்து வரவும். அதோடு சிவ புராணங்கள், சிவ திருவிளையாடல்களைப் படிக்கலாம். மேலும் நந்தி பகவானிடம் நம் குறைகளை கூறி, நற்பலன்களை அருள்வாய் என வணங்க வேண்டும். அதே வேண்டுதலை சிவ பெருமானிடமும் வைக்க வேண்டும்.

    sivan

    பிரதோஷ நேரதத்தில் செய்யக் கூடாதவை:

    • விரதம் இருந்து சிவபெருமான், நந்தியை வழிபாட சென்றவர்கள் கோயிலில் யாருடனும் பேசாதீர்கள்.
    • எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள்.
    • சிவனின் நாமத்தை உச்சரிக்கின்ற பொழுது யாருடனும் சைகையினால் கூட பேசக்கூடாது.
    • நந்தியை மறைத்துக் கொண்டு சிவ பெருமானை வணங்காதீர்கள்
    • நந்தி பெருமானிடம் அருள் பெற்ற  பின்பு தான் சிவனை வணங்கிட வேண்டும்.
    • யாரையும் எதிர்மறையாக பேச வேண்டாம். அசுப வார்த்தைகளை தவிர்த்திடுங்கள்.

    அதோடு ஈஸ்வர தியானம் மற்றும் நந்தீஸ்வரர் 108 போற்றி மந்திரங்களை 5 முறை ஜெபித்தால் அனைத்து செல்வங்களும் நமக்கு கிடைக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....