Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்தில் ஒரு மஞ்சள் புரட்சி : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னிந்திய அணிகள் !

    கால்பந்தில் ஒரு மஞ்சள் புரட்சி : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னிந்திய அணிகள் !

    ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஏ.டி.கே மொகுன் பஹான் அணி ( 1-0 ) என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. தோற்றாலும் ஹைதராபாத் அணியே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 8-வது சீசனில் இரண்டாவது அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் ஏ.டி.கே மொகுன் பஹான் மற்றும் ஹைதாராபாத் அணிகள் நேற்று கோவாவில் உள்ள ஜி.எம்.சி தடகள மைதானத்தில் மோதிக்கொண்டன. 

    ஏற்கனவே நடந்த இரண்டாவது அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் ஹைதாராபாத் அணி ( 3-1 ) என்ற கோல்கணக்கில் ஏ.டி.கே மொகுன் பஹான் அணியை வீழ்த்தியிருந்தது. கோல் மற்றும் வெற்றியின் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ள ஹைதராபாத் அணி எவ்வித அழுத்தமும் இன்றி விளையாடியது. ஆனால், வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் கோல்கணக்கிலும் முன்னிலை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஏ.டி.கே மொகுன் பஹான் அணி கடுமையாகப் போராடி வெற்றி பெரும் முனைப்பில் விளையாடியது.

    கடுமையாகப் போராடிய அவ்வணியினர் முழுமுனைப்புடன் தாக்குதலைத் தொடர்ந்தனர். எவ்வளவு கடுமையாகப் போராடிய போதிலும் ஹைதராபாத் அணியினரின் அருமையான தடுப்பு ஆட்டத்தை எதிர்த்து ஏ.டி.கே மொகுன் பஹான் அணியினரால் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில், ஹைதராபாத் அணியில் நடந்த சிறிய மாற்றத்தால், தடுமாற்றம் கண்ட தடுப்பு ஆட்டத்தை சரியாகப் பயன்படுத்தி ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் ஏ.டி.கே மோகுன் பஹான் அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடிக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு எகிறியது. ஆனால், 7 நிமிடங்கள் அதிகமாக வழங்கப்பட்ட போதிலும் ஏ.டி.கே மொகுன் பஹான் அணியினரால் இன்னொரு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ( 1-0 ) என்ற கோல்கணக்கில் ஏ.டி.கே மொகுன் பஹான் அணியே வெற்றி பெற்றாலும், கோல் முன்னிலையின் அடிப்படையில் ஹைதராபாத் அணி 3 கோல்களுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    ஏற்கனவே, கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில் தற்பொழுது ஹைதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஐ.எஸ்.எல் வரலாற்றில் இரு தென்னிந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது இரண்டாவது முறை ஆகும். இவ்விரு அணிகளுக்கு இடையேயேயான இறுதிப்போட்டியானது வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவாவில் உள்ள படோரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....