Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்பெட்ரோல், டீசல் விலை; 100-வது நாளாக மாற்றமில்லை ஆனால் இதன் பின்பு, எச்சரிக்கும் வல்லுநர்கள்!

    பெட்ரோல், டீசல் விலை; 100-வது நாளாக மாற்றமில்லை ஆனால் இதன் பின்பு, எச்சரிக்கும் வல்லுநர்கள்!

    தினம் தினம் நுகர்வோர்களை பதைபதைப்பில் வைத்திருக்கும் திறமையை கொண்டதுதான், பெட்ரோல், டீசலின் விலை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல்,டீசல் விலை நாடு முழுவதும் மிக அதிகமாக அதிகரித்தது. முக்கிய நகரங்களில் 100 ரூபாயை கடந்து  விற்பனை செய்யப்பட்டன. தொடர்ந்து தினமும் விலை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தது எல்லாம் நம்மில் பலரும் அறிந்ததே. ஆனால், சமீப காலமாக இந்த அதிர்ச்சிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    petrol

    ஆம்! இன்று 100-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏதும் இன்றி விற்கப்படுகிறது. கடந்த 99 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் அதே விலையில்தான் விற்கப்படுகிறது .

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் நிறுவனம் ஆகியவை பெட்ரோல்-டீசல் விலையை மாற்றம் செய்யும். ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தும் பெட்ரோல், டீசல் விலை மாறாமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    இப்படியாக சூழல்கள் நிலவ, பலரின் வியப்பை மக்களின் மகிழ்ச்சியை குறைக்கும்படி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் போன்ற ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வதால், தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை நிச்சயம் உயரும் என்று பொருளாதார வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....