Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎலக்ட்ரிக் பைக்குகளை திரும்பப் பெரும் நிறுவனங்கள்! காரணம் இதுதான்!

    எலக்ட்ரிக் பைக்குகளை திரும்பப் பெரும் நிறுவனங்கள்! காரணம் இதுதான்!

    எலக்ட்ரிக் பைக்குகளை சில நிறுவனங்கள் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கின்றன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரித்து வருவதால் மக்கள் பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மாறி வருகின்றனர். ஆனால் இந்த எலக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்துவதின் மூலம் பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பதால் மக்கள் பயத்தில் இருந்து வருகின்றனர். காரணம், நாடு முழுவதும் ஆங்காங்கே எலக்ட்ரிக் பைக்குகளால் தீ விபத்து ஏற்படுகின்றன. இதனால் உயர் சேதமும் ஏற்படுகிறது. 

    அதுவும் கோடைக்காலம் என்பதால், பேட்டரி சூடு தாங்காமல் வெடிப்பதாக புகார்கள் எழுந்தன. மேலும் அதிக நேரம், சார்ஜ் செய்வதாலும் இவ்வாறு எலக்ட்ரிக் பைக்குகள் வெடிக்கின்றன என்பது பதிலாக இருந்தது. இருப்பினும் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு வழங்கப்படாமல் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

    கடந்த ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு எலக்ட்ரிக் பைக்குகள் தேவை அதிகரித்துள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வேகமாக நகரும் இந்த அறிவியல் உலகில், பெட்ரோல், டீசல் இன்றி இயங்கும் இந்த எலக்ட்ரிக் பைக்குகள் பெரும் பங்காக இருந்தாலும் விபத்துகள் நிகழ்வது வேதனை அளிக்கிறது. 

    இந்நிலையில், சில நிறுவனங்கள் தாங்கள், விற்பனை செய்த எலக்ட்ரிக் பைக்குகளை திரும்பப் பெற்று, அவற்றை பழுது பார்த்து, பாகங்களை மாற்றியமைத்து பின்பு மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு, விழிப்புணர்வு மூலம்  எலக்ட்ரிக் பைக்குகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளன. ஒகினாவா, ஓலா போன்ற நிறுவனங்கள் இந்தச் செயலை முன்னெடுத்து உள்ளனர். கிட்டத்தட்ட, 7000 பைக்குகள் இப்போது திரும்பப் பெற உள்ளன. இப்படி செய்வதின் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்கின்றனர் அறிவுரையாளர்கள். 

    இது ஒரு புறம் இருக்க சமீப காலமாக, ஓலா எலக்ட்ரிக் பைக் ஒன்றை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது பைக் தொடர்ந்து பழுது அடைந்ததால் கோபத்தில், பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்படத்தக்கது.

    தென்னிந்திய திரையுலகம் குறித்து கேஜிஎஃப் வில்லன் சொன்னது இதுதான் – ‘அதிரா’ எனும் ஆக்ரோஷக்காரன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....