Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்பாய்ந்து சென்று வேட்டையாடும் பனிச்சிறுத்தை! வைரல் காணொளி

    பாய்ந்து சென்று வேட்டையாடும் பனிச்சிறுத்தை! வைரல் காணொளி

    லடாக் பகுதியில் பாய்ந்து சென்று வேட்டையாடும் பனிச்சிறுத்தை தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    பனிப்பொழியும் பிரதேசங்களில் விலங்குகள் வாழ்ந்து வருவதை காண்பது மிகவும் ஆச்சர்யமானது. அதிலும் வேட்டையாடி உணவு உண்பதை நாம் படத்தில் வேண்டுமானால் காணலாம். நேரில் பார்க்க அரிதாக எண்ணும் நிகழ்வை புனேவைச் சேர்ந்த வேதாந்த் திட்டே மற்றும் எடித் பார்ஸி என்ற இரண்டு புகைப்பட கலைஞர்கள் சேர்ந்து எடுத்துள்ள காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    அந்தக் காணொளியில், பனிச்சிறுத்தை ஒன்று காட்டு ஆடு ஒன்றை துரத்தி செல்கிறது. காட்டு ஆடு தப்பித்து செல்ல முயற்சி செய்கிறது. இருப்பினும் தொடர்ந்து பனிச்சிறுத்தை காட்டு ஆட்டினை வேட்டை ஆடுகிறது. 

    இந்தக் காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வேதாந்த், இயற்கை வழங்கக்கூடிய தருணத்தை இன்னும் தன்னால் நம்ப முடியவில்லை என்றும், இதற்கு தானே சாட்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இயற்கை ஆர்வலரான வேதாந்த் வனவிலங்கு ஆராய்ச்சி, விலங்குகள் பாதுகாப்பு போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆவார்.

     

    View this post on Instagram

     

    A post shared by Vedant Thite (@vedantthite)

    அஸ்வினுக்கு இருப்பது கிரிக்கெட் மூளை அல்ல – ரவீந்திர ஜடேஜா பேச்சு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....