Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஆன்மிகம்சிவன் பார்வதிக்கு நடந்த திருமணம் பற்றிய வரலாறு !

    சிவன் பார்வதிக்கு நடந்த திருமணம் பற்றிய வரலாறு !

    இந்து புராணங்களில் சிவன் பார்வதியின் திருமணக் கதை என்பது ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு விதமாக கூறுகின்றனர். சிவசக்தி என்பது சிவனும் பார்வதியும் ஒன்று என்பதைக் குறிக்கும். இந்தச் சிவசக்தியின் திருமண நிகழ்வை இங்கே காண்போம் வாருங்கள்.

    பொதுவாக கூறப்படுவது சிவன் பார்வதி திருமணம் அரசர் குல முறையில் நிகழ்ந்தது என்றும், கோலாகலமாக மூவுலகை ஆண்ட மன்னர்கள் மன்னிகள்  என அனைவரும் வந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் பார்வதி அரச குல மங்கை என்பதால் தான். 

    திவ்விய கோலம் எடுத்த சிவன்:

    மணமகனாக வந்த சிவனின் தோற்றம் பார்க்கவே மிகவும் வித்தியாசமாகவும் மயான நாற்றம் அடித்தும் சிவனின் பரிவாரங்கள் அனைவரின் உருவங்களும் சிதைந்தும் இருந்தது. இவற்றை எல்லாம் பார்ப்பதற்கே மனித இனம் போல் தெரியவில்லை, காரணம் அவர்கள் மயானகொள்ளையில் வசிப்பவர்கள்.

    இப்படியாக சிவன் நீண்ட முடித்தறித்து உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்டு இரத்த வாடை வீசியபடி வந்ததால் பார்வதியின் அம்மா மயங்கி கீழே விழுந்தார்.

    உடனே, தாயார் நிலை அறிந்து உடல்நலம் விசாரித்ததும், சிவனைப் பார்க்க சென்ற பார்வதி, “நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ அது எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. நீங்கள் உங்கள் விருப்பம் போல் இருப்பதில் தான் எனக்கு முழு மனமகிழ்ச்சி. ஆனால் என் அம்மாவிற்காக நீங்கள் உங்கள் தோற்றத்தை மாற்ற வேண்டும் ” என்று மன்றாடி வேண்டிக் கொண்டார். sivan pic

    உடனே சிவன் திவ்விய கோலம் எடுத்து அழகான மணமகன் கோலத்தில் தோன்றினார். தாயாரும் மகிழ்ச்சி அடைந்து ஏற்றுக் கொண்டு திருமணத்தை வெகுச் சிறப்பாக நடத்தி வைத்தார்.

    குலம் கோத்திரம் இல்லாத சிவன்:

    அரசத் திருமணம் என்பதால் சுயம்வரம் நடப்பது வாடிக்கை தான். அப்படி பார்வதியின் சுயம்வரத்திற்கு சிவன் வந்தார். அப்போது மன்னர்கள் பல வந்திருந்தனர். பொதுவாக அவரவர் குலத்தின் பெருமையும் கோத்திரமும் அரச குல வழியும், மன்னர்கள் இளவரசர்கள் வருகையில் வாயிற்காவலாளி கூறுவது வழக்கம். அப்போது தான் எந்த நாட்டு அரசர்கள் வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும். மேலும் சுயம்வரத்திற்கு அவர் தகுதி உள்ளவரா எனவும் அந்நாட்டு மக்களும் அமைச்சர்களும் பார்த்து தெரிந்து கொள்வது வழக்கம். 

    அப்படி சிவன் வரும் போது நீங்கள் எந்த குல இளவரசர் எனக் கேட்டு விவாதம் நடந்தது. (நமக்கு தெரிந்தது தானே சிவன் குலம் கோத்திரம் அற்றவர் என்பது)

    சரி குலம் வேண்டாம். எந்த இடத்தில் இருந்து வருகிறாய், உன் சொந்த நாடு என்ன?  உன் அப்பா அம்மா யார் எனக் கேள்விகள் எழுந்தன. இவ்வாறு கேள்விகள் அடுக்கடுக்காய் கேட்டும் சிவன் சிலையாய் நின்றார்.

    சிவனுடன் வந்த பரிவாரங்கள் பேசும் மொழிகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் பெரும் குழப்பங்கள் நிலவியது. மயானப் பிணங்களை எரிக்கும் நாற்றமும் அவர்களின் தோற்றமும் சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது. sivan pic

    உடனே பார்வதியின் தந்தைக்கு கடும் கோபம் வந்து விட்டது. “யார் இவன், குல வழி தெரியாத இவனுக்கு எப்படி பெண் அளிப்பது, இவன் எவ்வாறு இங்கு வரலாம், தாய் தந்தை பெயர் கூட தெரியாத இவனுக்கு என்ன இங்கு வேலை” எனக் கடுங்கோபமாய் வார்த்தைகளை அள்ளி வீசினார்.

    பிறகு பார்வதியின் தந்தை, “முதலில் இவனை வெளியே தள்ளுங்கள். தன் பிறப்பு அறியாதவனுக்கு எல்லாம் இங்கு என்ன வேலை இவனை வெளியே அழைத்து செல்லுங்கள்” என காவலாளிகளுக்கு உத்திரவிட்டார். 

    உடனே நாரத முனிவர் எழுந்து சபைக்கு நடுவே வந்து நின்று அவரின் வாத்தியமான ஏகதாரா-வை  எடுத்து “டங்க் டங்க்” என வாசித்தார்.  

    பார்வதியின் தந்தைக்கு சற்று அதிக கோபம் வந்துவிட்டது. “நாரத முனியே எதற்கு இவ்வாறு நடுச் சபையில் ஏகதாராவை எடுத்து வாசிக்கின்றாய் உனக்கு என்ன ஆயிற்று” எனக் கேட்டார். 

    அதற்கு நாரத முனி, “நாராயண! நாராயண!  இதுதான் அவர் முன்னோடி, இது தான் அவரின் குலமும் கோத்திரமும் இதுதான் அவரின் பெற்றோர்கள்” என உறக்கச் சொன்னார். 

    உடனே பார்வதியின் தந்தை, “என்ன உளருகிறீர்கள்? ஏகதாராத்தில் எப்படி? ஒன்றும் விளங்கவில்லை! தெளிவாகக் கூறுங்கள்” என்றார்.

    அதற்கு நாரதர், “ஆம். நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஏகதாராமே பதில்! சிவன் இதன் இசையில் சுயம்புவாய்த் தோன்றியவர், ஆதலால் குலமும் இல்லை அவருக்கு பெற்றோரும் இல்லை” என்றார்.

    உடனே பார்வதியின் தந்தை அனைத்தையும் புரிந்துக் கொண்டு மணமகனை மனதார ஏற்றார். திருமணமும் வெகுச் சிறப்பாய் நடந்தது. sivan parvati marriage pic

    என்ன இந்தப் புராண கதை எப்படி இருந்தது? 

    புராணங்கள் உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் ஆனால், நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒருவரின் தோற்றத்தை வைத்து நாம் யாரையும் மதிப்பிடக் கூடாது. திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் புரிந்துக் கொள்ளுதல் முக்கியம் என பல விடயங்களை அறியலாம். 

    சிவனே சக்தி! சக்தியே சிவன்! 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....