Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ரஜினி, விஜய் வரிசையில் அடுத்து இவர்தான்' - வெளிப்படையாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்!

    ‘ரஜினி, விஜய் வரிசையில் அடுத்து இவர்தான்’ – வெளிப்படையாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்!

    நடிகர்கள் ரஜினி, விஜய் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன்தான் உள்ளதாக பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஜதிரத்னலு எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்த  தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம்தான், பிரின்ஸ். இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது.

    இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    இதையும் படிங்க: புரோமோஷனுக்காக ஜப்பானுக்கு பறந்த ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு.. அங்கும் சாதிப்பாரா எஸ்.எஸ் ராஜமௌலி?

    அக்டோபர் 21-ம் தேதி வெளியாகவுள்ள பிரின்ஸ் திரைப்படத்தை கோபுரம் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், கோபுரம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் ‘ரஜினி, விஜய் வரிசையில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான். அவருடைய படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் எங்கள் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்தப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்’ என சிவகார்த்திகேயனை பாராட்டி பேசியுள்ளார்.

    முன்னதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணிமும், எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார் என பேசியது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....