Monday, March 18, 2024
மேலும்
  Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்நாம் காதலிப்பவரின் மனதில், நாம் என்னவாக இருக்கிறோம்? - "நீ கவிதைகளா" பாடல் ஒரு பார்வை!

  நாம் காதலிப்பவரின் மனதில், நாம் என்னவாக இருக்கிறோம்? – “நீ கவிதைகளா” பாடல் ஒரு பார்வை!

  ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பாடல் நம்மிடத்தில் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும். நம்மை அறியாமலே நாம் முனுமுனுக்கும் பாடலென்று பல இருக்கும். சோகம் சூழ்ந்தப்பாடலாக அதேசமயம் வசந்த உண்ர்வைத் தரக்கூடிய பாடல்களும் இருக்கும். பாடல்கள் பல விதம் என்பதுதான் உண்மை.

  பல வித பாடல்களையும் நாம் நம் வாழ்வில் கடந்துப்போவோம். எதோ ஒரு சமயத்தில் கடந்தப்பாடலை மீண்டும் கேட்போம். கேட்ட மாத்திரத்தில் இருந்து மீண்டும் அப்பாடலுடன் உறவாட தொடங்குவோம். அப்படியான ஒரு பாடல்தான், நீ கவிதைகளா…

  சிலர் இப்பாடலை கடந்து இருப்பர், சிலர் இப்பாடலுடன் மீண்டும் இணைந்திருப்பர், சிலர் இப்பாடலை கேட்க தொடங்கியிருப்பர். சிலர் இப்பாடலை கடக்காமல் இருப்பர். பலர் இப்பாடலை அறியாமல் இருப்பர். 

  மேற்கண்ட ரகத்தினுள் பல பாடல்கள் பொதிந்தாலும், நாம் இக்கட்டுரையில் பார்க்கப்போவது, நீ கவிதைகளா பாடல்தான். மரகத நாணயத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலை பலருக்கும் பிரியமான பாடகர் பிரதீப் குமார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடலுக்கான வரிகளை ஜிகேபி அவர்கள் எழுத, திபு நினன் தாமஸ் அவர்கள் இசையமைத்துள்ளார்.

  பாடல் வரிகளும், பாடியவரும், பின்னனி இசையும் ஏதேனும் ஒன்றில் மாற்றம் நிகழ்ந்தாலும் சில பாடல்கள் தங்கள் தனித்தன்மையை இழந்துவிடும்.  நீ கவிதைகளா பாடலும் அப்படியான ஒரு பாடல்தான். மூன்றின் பங்களிப்பில் ஒன்று குறைந்தாலும் அப்பாடலின் உன்னதம் குறைந்து விடுவதாகவே தோன்றுகிறது. 

  வெகுநாட்களுக்குப் பிறகு அல்லது சில சச்சரவுகளுக்குப் பிறகு நாம் நேசிப்பவரின் மனதில், நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை அவரின் பார்வையில் நம் காதல் என்னவாக உள்ளது என்பதை 

  நீ கவிதைகளா

  கனவுகளா கயல்விழியே –நான்

  நிகழ்வதுவா கடந்ததுவா

  பதில் மொழியேன்

  என பின்னணியில் இசைக்கோர்வைகள் மென்மையாக நிகழ, பிரதீப் குமார் தன் குரலில் வரிகளின் உணர்வை வெளிக்கொணர்வார். 

  காதல் வயப்பட்ட நபரோடு நேரத்தை செலவிடுதல் என்பது அலாதியானது. அலாதியான அனுபவத்தை அவ்வபோது பெற்று வர திடீரென நமக்கான நபரை பாரத்து வெகு நாட்களான சூழலில் மனம் கீழ்கண்டவாறு ஏங்கும்தானே..

  உன்னோடு

  நெஞ்சம் உறவாடும்

  வேளை தண்ணீர்

  கமலம் தானா

   

  முகம் காட்டு

  நீ முழு வெண்பனி

  ஓடாதே நீ ஏன்

  எல்லையே 

   

  நமக்கென ஒரு ரசனையிருக்கும், சில கற்பனைகள் இருக்கும் அவை நமக்கு மிக அழகியலாய் தோன்றும், அந்த அழகியலுக்குள் நாம் நேசிக்க கூடிய ஒருவரைப் பொருத்திப் பார்த்தல் என்பது இயல்பு. அந்த இயல்பானது, இப்பாடலில் நாம் நேசிக்க கூடிய நபரை மழையோடு நனையும் புது பாடல் என்று உருவகம் செய்கிறது. மேலும், அழகான திமிரே என அழைத்து, காற்றோடு பரவும் உன் வாசம், புது போதைதான் என்கிறது. 

  காதலில் திளைத்திருக்கும்போதும் சரி, பிரிதல் நிகழ்ந்துக்கொண்டிருக்கும்போதும் சரி, நம் காதல் இணை நமக்காக பிறந்துள்ளார் என்ற உணர்வு ஆழமாய் இருக்கும். அந்த உணர்வை, ‘நான் உனக்கெனவே நான் முதல் பிறந்தேன் என்றும் எனக்கெனவே நீ  கரம் விரித்தாய் என்றும் பாடலாசிரியர் ஜிகேபி கூறியிருக்கிறார். 

  இப்படியாக காணத்துடிக்கும் அந்த உயிரைக் கண்டால் என்ன நேரும் என்று யோசிக்க, 

  மந்தார பூப்போல

  மச்சம் காணும் வேல

  என்னத்த நான் சொல்ல

  மிச்சம் ஒன்னும் இல்ல

  என்று வரிகளில் கூற அதற்கு இசை ஏதுவாக பிரதீப் குமார் அவர்கள் தனது குரலால் அழகியலாய் வெளிப்படுத்தியிருப்பார். 

  முழு மதியினில், பனி இரவினில், கனி பொழுதினில் ஓடாதே என்று பாடலில் வரும் வார்த்தை இப்பாடலுக்கும் பொருந்தும். 

  பாடலைக் காண ; https://www.youtube.com/watch?v=pVkDZueTBpY

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....