Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களின் பட்டியல்!

    உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களின் பட்டியல்!

    உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர், ஷாங்கி விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

    உலக அளவில் கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், விமான போக்குவரத்தை பயணிகள் பலரும் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும் விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய சலுகை மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

    இந்தப் பட்டியலில் 20223 ஆம் ஆண்டின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் நாட்டின் ஷாங்கி விமான நிலையம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

    இதைத்தொடர்ந்து, தோஹா விமான நிலையம், டோக்கியோவின் ஹனீடா விமான நிலையம், சியோலின் இங்கியோன் விமான நிலையம், பாரீஸின் சார்லஸ் டி கெல்லி விமான நிலையம் ஆகிய விமான நிலையங்கள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. 

    இதற்கடுத்த நிலையில், இஸ்தான்புல், முனிச், சூரிச், நரிட்டா உள்ளிட்ட விமான நிலையங்கள் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தில்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையம் 36 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

    ‘நன்றி மறக்காமல் இருக்க வேண்டும்’ – வீடியோவை வெளியிட்ட ரிஷப் பந்த்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....