இரவு நேரங்களில் குளிராகவும், பகல் நேரங்களில் வெயிலும் என இரண்டு சீதோஷண நிலைகளும் ஒரே காலங்களில் வருவதால் பலருக்கும் குளிரிலும் உடல் உஷ்ணம் உண்டாகின்றது. இந்த உடல் உஷ்ணத்தை இயற்கை வழியில் குறைத்திடும் எளிய முறைகளை இங்கே தொடர்ந்து காணலாம்.
- இரவு படுப்பதற்கு முன்பு உள்ளங்காலில் நல்லெண்ணெய் தடவி கால்களை இதமாக மசாஜ் செய்து வந்தால் உடனடியாக உடல் உஷ்ணம் தணியும்.
- உடல் உஷ்ணம் ஏற்பட்டவர்களுக்கு மலசிக்கல் பிரச்னையும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இவர்கள் திரிபலா லேகியம் என்னும் இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
நெல்லிக்காய் குளிர்ச்சி தரக்கூடியது. எனவே உடல் உஷ்ணம் உள்ளவர்கள் தினசரி ஒரு நெல்லிக்காயை உண்டு வரலாம்.
தயிரை விட மோர் உடலிற்கு நல்லது. உடல் உஷ்ணத்தை குறைக்க கூடிய மோரை மதிய வேளையில் பானமாக எடுத்துக் கொண்டால் உடல் சூடு தணியும்.
- எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு பயன்படுத்தும் நல்லெண்ணெய்யை காய்ச்சியே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு குளிப்பதால் உடல் உஷ்ணம் உடனடியாக குறையும்.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணியாக வெந்தயம் செயல்படுகிறது.
- விளக்கெண்ணெய் உடல் உஷ்ணத்திற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி, வயிறு கடுப்பு போன்றவற்றிற்கு விளக்கெண்ணெயை தொப்புளில் தடவ உடனடியாக வயிறு உஷ்ணம் குறையும்.
- உடல் உஷ்ண காலத்தில் வெள்ளரி பிஞ்சுகளை தினந்தோறும் சாப்பிடலாம்.
உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அசைவ உணவுகளை அளவாக எடுத்துக் கொண்டு, முள்ளங்கி, புடலங்காய், பூசணி, சுரைக்காய் போன்ற நீர்காய்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.