Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்உலகநாயகன் கமல்ஹாசனை ஈடுசெய்வாரா நடிகர் சிலம்பரசன்? ஞாயிறு பதில் தெரியும்!

    உலகநாயகன் கமல்ஹாசனை ஈடுசெய்வாரா நடிகர் சிலம்பரசன்? ஞாயிறு பதில் தெரியும்!

    நடிகர் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தின் மூலம் கொடுத்த கம்-பேக்கை எவராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சிலம்பரசன் அவ்வளவுதான் என்ற அத்தனை நபர்களையும் மாநாடு திரைப்படம் வாயடைக்கும்படி செய்தது. சிலம்பரசன் நடிகர் சிலம்பரசனாக மீண்டும் வந்துவிட்டார் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியும், நம்பும்படியும் மாநாடு திரைப்படமும் இருந்தது. சிம்புவின் நடிப்பும் இருந்தது.

    Maanadu 2

    மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிலம்பரசன் நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படமும், பத்து தல என்ற திரைப்படமும் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்த மாதம் மூன்றாம் தேதி சிம்பு அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட அந்நாளில் சிலம்பரசனின் உடற்பயிற்சி காணொளி வெளியிடப்பட்டு அவை ட்ரெண்ட் ஆனதோடு பலருக்கு உத்வேகத்தை அளித்தது. 

    நடிகர் சிலம்பரசன் தற்போது இருக்கும் தோற்றத்திற்கு பின் இருக்கும் வலிகளும், விடா முயற்சிகளும் அக்காணொளியின் மூலம் தெள்ளத்தெளிவாய் விளங்கின. மேலும்,  அக்காணொளிக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் மீது மதிப்புகள் பலருக்கு கூடின.

    இம்மதிப்புகளை வைத்துக்கொண்டு நடிகர் சிலம்பரசன் அவர்கள் சின்னத்திரைக்கு மீண்டும் காலடி எடுத்து வைக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஓன் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகர் சிலம்பரசன் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

    Maanadu

    ஆம்! பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியை இனி நடிகர் சிலம்பரசன்தான் தொகுத்து வழங்க இருக்கிறார். முன்னதாக பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வேலைச்சுமையால் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

    சமீபத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியின் புரோமோ ஒன்றில் நடிகர் சிலம்பரசன் ‘எதிர்ப்பார்க்கலல….நானே எதிர்ப்பார்க்கல’ என்ற வசனத்துடன் தோன்ற பிக்பாஸ் இரசிகர்கள் மட்டுமின்றி சிலம்பரசன் இரசிகர்களும் ஆவலுடன் நடிகர் சிலம்பரசன்  தொகுத்து வழங்குவதை காண ஆர்வத்துடன் உள்ளனர்.

    வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கும் பகுதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க; தோன்றும் விதம் முழுவதும் சரியில்லை என்றாலும் தைரியம் சிலம்பரசனிடம் வந்திருக்கிறது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....