Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஷாருக்கானின் மீட்சி ஆரம்பம்! அதிரப்போகும் இந்திய திரையுலகம்!

    ஷாருக்கானின் மீட்சி ஆரம்பம்! அதிரப்போகும் இந்திய திரையுலகம்!

    ஷாருக்கான், இந்திய திரையுலகத்தால் தவிர்க்க முடியாத நடிகர். பாலிவுட் நடிகர் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஷாருக்கான்தான். தனது கடின உழைப்பால் அவர் அடைந்திருக்கும் உச்சம், பலருக்கும் பெரிய உத்வேகமாய் இருந்து வருகிறது. இப்படியாக ஷாருக்கான் இருக்க, கடந்த மூன்று வருடங்களாக ஷாருக்கானின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

    ஆம்! மூன்று வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஷாருக்கானின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை என்பதே காரணம் ஆகும். இதனால், அவர் தொடர்ந்து சில காலம் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

    பாலிவுட் என்று இல்லாமல், இந்தியா முழுவதும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டுவந்தார், ஷாருக்கான். ரசிகர்களும் ஷாருக்கானின் அடுத்த திரைப்படத்திற்காக காத்திருந்தனர். சில சமயங்களில் பொறுமை இழந்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஷாருக்கான் திரைப்படத்தை விரைவில் திரையில் காண வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். சொல்லப்போனால், ஷாருக்கான் அவர்களே தனது திரைப்படத்திற்காக காத்திருந்தார் என்றே கூற வேண்டும்.

    இப்படியாக, சூழல்கள் இருக்க ஒருவழியாக ஷாருக்கான் நடிக்க இருக்கும் திரைப்படங்கள் குறித்தான அறிவிப்புகள் கடந்த ஒரு வருடமாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி ‘பதான்’ என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து முடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். பதான் திரைப்படமானது அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

    மேலும், ரசிகர்கள் ஆனந்தத்தில் ஈடுபடும்படி மற்றொரு அறிவிப்பையும் ஷாருக்கான் வழங்கியுள்ளார். ஆம்! சஞ்சு, முன்னா பாய் எம்பிபிஎஸ், பிகே, 3 இடியட்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ‘டன்கி’ என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. மேலும், இத்திரைப்படமானது அடுத்த வருடம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் பலத்த சந்தோஷத்தில் உள்ளனர்.

    ‘டன்கி’ திரைப்பட அறிவிப்பை, சிறிய காணொளியாக ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். இந்த காணொளியானது மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    மேற்சொன்ன இரு திரைப்படங்களும் அல்லாமல், ஷாருக்கானை அட்லீ இயக்க இருப்பது இச்சமயத்தில் நினைவு கூற வேண்டிய ஒன்று.

    2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு திரைப்படமும், இறுதியில் ஒரு திரைப்படமும் வெளிவருவது ஷாருக்கானின் ரசிகர்களை பெரும் ஆனந்தத்திலும் எதிர்ப்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படியுங்கள், கோடி கணக்கில் அள்ளும் கேஜிஎப் சாப்டர் 2- வசூல் வேட்டை இனிதான் ஆரம்பம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....