Wednesday, March 22, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை

    ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை

    உடுப்பி மாவட்டத்தில் அரசு கல்லூரி (junior PU college)  ஹிஜாப் அணிந்து வர தடை விதித்திருந்தது.  கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபுராவில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஹிஜாப் அணியாமல் வந்தால் தான் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவீர்கள் என கல்லூரி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா பரவல் காரணமாக சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சர்ச்சையானது கொஞ்ச நாள் ஓய்வு பெற்றிருந்தது.

    இப்பொழுது கல்லூரி திறந்ததும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் மீண்டும் சர்ச்சை வெடித்தது. இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதை கண்டித்து  இந்துத்துவா அமைப்பினர் காவித் துணிகளை அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். இந்த தகவல் காட்டுத்தீ போல கர்நாடக முழுக்க பரவியதால், கல்லூரிகளுக்கு வரும் இஸ்லாமிய  மாணவிகள் பலரும் ஹிஜாப் அணிந்து வராத தொடங்கினர்.  இதனைத்தொடர்ந்து  சில இந்து மாணவ-மாணவிகள் காவித்துணிகளை கல்லூரிகளுக்கு அணிந்து வர ஆரம்பித்தனர். இன்னும் சிலர் நீலத் துணிகளை அணிந்து வந்து அம்பேத்கர் கோஷங்களை எழுப்பி வருவதால் கல்லூரி வளாகத்திற்குள் மதக் கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

     

     இதன் காரணமாக கர்நாடகாவில் இந்து இஸ்லாம் மோதல் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.  ஹிஜாப் அணிந்து மதத்தை கல்லூரிக்குள் கொண்டுவரக்கூடாது என வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிக்க, எங்கள் உடை எங்கள் உரிமை என்று இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கின்றனர்.

    எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் தங்கள் மதத்திற்கு ஏற்ப எந்த ஆடையையும் அணியலாம். ஹிஜாப் அணிந்த மாணவிகளை தடை செய்வது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.என்று முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏற்கனவே கூறியிருந்த நிலையில் கர்நாடக பாஜக மாநிலத்து தலைவர் நளின் குமார் கட்டில் அவர்கள் கல்வி நிறுவனங்களில்  ஹிஜாப் அணிவதை அரசு அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார். 

    இதனிடையே நேற்று ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, அவர்களை தனி அறையில் உட்கார வைத்துள்ளனர். அவர்களுக்கு பாடங்கள் எதுவும் நடத்தபடவில்லை. மாணவிகள் கல்லூரி வாயிலில் நிற்பதால் ஏற்படும் பதற்றத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...