Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசெனிகலை உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்கிறார் சேடியோ மானே : போட்டியின் பரபரப்பு நிமிடங்கள்!

    செனிகலை உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்கிறார் சேடியோ மானே : போட்டியின் பரபரப்பு நிமிடங்கள்!

    நம்பிக்கை நாயகன் சேடியோ மானேவின் பரபரப்பான இறுதி நிமிட கோல் மூலம் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது செனிகல் கால்பந்து அணி. 

    இந்த வருடம் நடைபெற இருக்கும் கத்தார் 2022 உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான், கனடா கால்பந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்று சாதனை படைத்திருந்தது. மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் செனிகல் மற்றும் எகிப்து கால்பந்து அணிகள் மோதிக்கொண்டன. 

    இந்த போட்டியானது செனிகல் நாட்டில் உள்ள ஒரே அங்கீகரிக்கப்பட்ட மைதானமான ஸ்டேடு மே அப்டோலயே வேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர்களும், சகாக்களுமான சேடியோ மானே மற்றும் முகமது சாலா தங்கள் தாய்நாட்டு அணிகளான செனிகல் மற்றும் எகிப்து அணிகளுக்காக விளையாடினர். 

    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் கடுமையாக மோதிக்கொண்டன. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் எகிப்து அணிக்கு அதிர்ச்சி அளிப்பதுபோல் ஒரு சுயகோல் விழுந்தது. அந்த அணியின் நடுப்பகுதி தடுப்பாட்டக்காரர் ஹம்தி ஃபாதி தடுத்து நிறுத்த நினைத்த பந்து நிலைதடுமாறி கோல்கம்பத்துக்குள் நுழைந்தது. 

    இதன்மூலம் 1-0 என்று முன்னிலை பெற்றதால் செனிகல் அணி தடுப்பாட்டத்தில் இறங்கியது. வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஆடிய எகிப்து அணி தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆனால் அதன் விளைவாக அந்த அணிக்கு 3 மஞ்சள் அட்டைகள் கிடைத்தது தான் மிச்சம். முதல் பாதியின் முடிவில் செனிகல் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 

    இரண்டாவது பாதியிலும் செனிகலின் கையே ஓங்கி இருந்தது. பெரும்பாலும் செனிகல் அணியிடமே பந்து சுற்றிக்கொண்டு இருந்தது. எகிப்து அணி மேற்கொண்டு கோல் எதுவும் பெறாமல் இருந்ததற்கு அந்த அணியினர் கோல்கீப்பர் எம். எல் ஷெனாவிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் பல கோல்களை லாவகரமாக தடுத்து நிறுத்தினார்.

    முடிவில் செனிகல் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால், முந்தைய போட்டிகளின் அடிப்படையில் வெற்றி மற்றும் கோல்கணக்கில் 1-1 என்று சமன் ஆனது. இதனால் ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே ஏற்கனவே 90க்கும் மேலான நிமிடங்கள் களத்தில் ஆடியிருக்கும் வீரர்களால் முழுசக்தியுடன் ஆட முடியவில்லை. இதனால் ஆட்டம் பெனால்ட்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது. 

    இதில் முதல் இரண்டு வாய்ப்புகளையும் இரு அணிகளும் வீணடித்தது. எகிப்தின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது சாலா தன்னுடைய வாய்ப்பில் பந்தை மேலாக தூக்கி அடித்து அதிர்ச்சி அளித்தார். மூன்றாவது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்க, நான்காவது வாய்ப்பில் செனிகல் மட்டும் கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. 

    வெற்றியை முடிவு செய்யும் கடைசி வாய்ப்பில் செனிகலின் சேடியோ மானே கோல் அடித்து அவரது அணியை உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற வைத்தார். இந்த வெற்றியை செனிகல் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....