Sunday, March 24, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்செல்வராகவனின் பகாசூரன்; வெளியான தீம் மியூசிக் விடியோ!

    செல்வராகவனின் பகாசூரன்; வெளியான தீம் மியூசிக் விடியோ!

    இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் தீம் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.

    ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி, இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, ‘பகாசூரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது, பகாசூரன் படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி பகாசூரன் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு தறபோது அப்படத்தின் மேக்கிங் வீடியோ தீம் மியூசிக் உடன் வெளியிடப்பட்டுள்ளது.

     மேலும், செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள பகாசூரன் படமும், செல்வராகவனின் சகோதரர் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; பயிற்சியில் இந்திய அணி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....