Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சமூக நீதிப்பேசும் திமுக ஆட்சியில் இப்படி நடப்பது வெட்கக்கேடானது - சீமான் காட்டம்!

    சமூக நீதிப்பேசும் திமுக ஆட்சியில் இப்படி நடப்பது வெட்கக்கேடானது – சீமான் காட்டம்!

    தற்போது தமிழக அரசியலில் பரவலாக பேசப்படும் ஒன்றாக இருந்து வருவது இராஜகண்ணப்பன் அவர்கள் குறித்த செய்திதான். சமீபத்தில் திமுகவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள், அதிகாரி ஒருவரை சாதி பெயரைச் சொல்லி திட்டிய வழக்கில் அவருடைய பதவிப் பறிக்கப்பட்டது.

    பறிக்கப்பட்ட பதவிக்கு மாறாக வேறொரு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்! அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

    இந்நிகழ்வு குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ள அறிக்கையில் தன்னை சாதி ரீதியாக இழித்துரைத்து, பலமுறை அவமதித்ததாக தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் புகாரளித்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சாதி, மதம் என எதன்பொருட்டும், எவர் மீதும் எவ்விதப்பாகுபாடும் காட்டமாட்டேன் எனப் பதவியேற்பு உறுதிமொழி எடுத்த அமைச்சரே, சாதியக்கண்ணோட்டத்தோடு அதிகாரியை அவமரியாதை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் சீமான் அவர்கள் தெரிவித்தார். 

    “ ‘அரசியல் விருப்பு வெறுப்புகளை ஆட்சி நிர்வாகத்தில் ஒருபோதும் காட்டக்கூடாது’ என்றார் அறிஞர் அண்ணா. அரசியல் நிலைப்பாட்டையே ஆட்சியதிகாரத்தில் செலுத்தக்கூடாது என முழங்கியவரின் வழிவந்த கட்சியின் அமைச்சரவையிலேயே, இன்றைக்கு சாதி ஆதிக்க மனநிலை நிலவுவதும், சமூக நீதியெனப்பேசும் கட்சியின் ஆட்சியில் அமைச்சரே, சாதியத்துவேசத்தோடு நடந்துகொள்வதுமானப் போக்குகள் வெட்கக்கேடானது” எனவும் சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

    திமுகவினரே தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என அறிஞர் அண்ணா மீது சத்தியமிட்டு முழங்கிய தமிழகத்தின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் சாதிய மனநிலையோடு அவமதித்ததற்கு அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காது, துறைரீதியாக இடமாற்றம் செய்ததோடு நிறுத்திக்கொண்டது ஏமாற்றமளிக்கிறது என்று சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். 

    அமைச்சர் இராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்குத் துறைமாற்றம் செய்யப்படுவது என்பது எதிர்ப்பின் வீரியத்தைக் குறைத்து மடைமாற்றம் செய்யும் யுக்திதானே ஒழிய, தவறுக்கான உகந்த நடவடிக்கையல்ல என்பதை தனது அறிக்கையில் சீமான் அவர்கள் கூறியுள்ளார். 

    மேலும், அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்ய முன்வர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக என சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....