Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஆன்மிகம்பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியங்களும், ஏற்றக்கூடிய தீபங்களின் பலன்களும் …

    பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியங்களும், ஏற்றக்கூடிய தீபங்களின் பலன்களும் …

    தெய்வீகம் நிறைந்திருக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தம். ஒரு நாளின் பிறப்பு அதாவது சூரியன் உதயமாவதற்கு முன்பு, அதிகாலை 3.30 முதல் 5.30 வரை பிரம்ம முகூர்த்தம் நேரமாகும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் வரக்கூடிய முப்பத்து மூக்கோடி தேவர்களையும், அனைத்து விதமான தெய்வங்களையும் எளிதில் வழிபாடு செய்துவர உங்களுடைய துன்பங்கள் எல்லாம் நீங்கி, சகல சௌபாக்கியங்களையும் பெற்றிடலாம். இவ்வளவு நன்மைகள் நிறைந்த பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியங்களையும், தீபங்களை ஏற்றி வழிபடும் முறைகளையும் தொடர்ந்து காணலாம்.

    பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியங்கள்

    பிரம்ம முகூர்த்தத்தில் யாரெல்லாம் எழுகிறாரோ, அவருடைய தலைவிதியும் மாறுகிறது. ஒரு தனிமனித ஜாதகத்தில் குரு பகவான், சூரியன், சுக்கிரன், புதன் என அனைத்து சுப கிரகங்களும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழக்கூடியதாகவே இருக்கிறார்கள்.

    பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தெய்வ வழிபாடு, படிப்பு, தியானம், சூரிய நமஸ்காரம் போன்றவற்றை கடைப்பிடிப்பதால், இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் மிக சிறப்பான வாழ்க்கையாகவே அமைகின்றது.

    பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், வாழ்வில் ஏற்றத்துடன் வாழலாம். ரிஷிகள், முனிவர்கள், தேவாதிதேவர்கள் அனைவரும் சூட்சமாக இந்த பூலோகத்தில் உலா வரக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்தம் என்பதால், அந்த நேரங்களில் விளக்கேற்றி வழிப்படுவது மிகவும் சிறப்பு. நினைத்த காரியங்கள் நிறைவேறும். மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும்.

    தேவர்களும், ரிஷிகளும் உலா வரக்கூடிய நேரங்களில் வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு நிலைவாசலில் இரண்டு தீபங்களும், பூஜையறையில் பஞ்ச பூத சக்திகளை வழிபடும் விதமாக ஐந்து தீபங்களை ஏற்றுங்கள். இந்த பஞ்சப்பூத சக்திகளின் ஆற்றல் அந்த நேரத்தில் அதிகம் நிறைந்திருப்பதால், நம் வேண்டுதல்களும், ஆசைகளும் உடனடியாக நிறைவேறுகின்றன.

    தீபங்களின் பலன்கள்

    பிரம்ம முகூர்த்த நேரங்களில் நெய் விளக்கேற்றி வழிபட நம் வீட்டிற்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
    நல்லெண்ணெய் தீபம் ஆரோக்கியம் அதிகரிக்கும், ஆயுள் கூடும்.
    அதிகாலையில் அரசமர விநாயகரை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி 21 முறை வலம் வர நினைத்த காரியங்கள் சித்தியாகும்.


    நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்தால், தொலைந்த செல்வங்கள் திரும்ப வரும். பசுநெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், மற்றும் விளக்கெண்ணெய் என பஞ்சக்கூட்டு எண்ணெய் ஊற்றி தீபமேற்றினால் வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வார்கள்.

    குறிப்பு: சூரிய காந்தி எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....