Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்டைனோசரின் அழிந்த நாளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் : உண்மையில் நடந்தது என்ன ?

    டைனோசரின் அழிந்த நாளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் : உண்மையில் நடந்தது என்ன ?

    வானில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள விண்கற்கள் பூமியை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கியதின் மூலம் அதன் மேற்பரப்பில் வாழ்ந்த கொண்டிருந்த டைனோசர்கள் அழிந்தது. அந்த நாளில் அழிந்த டைனோசர்களின் புதைப்படிமங்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்துள்ளனர். 

    எலும்பின் தோலில் இன்னும் எச்சங்களை உடைய டைனோசரின் கால் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய பரிணாம வளர்ச்சியின் தொடக்க காலத்தில், அழிந்து போன டைனோசர் இனங்களின் புதைபடிமங்கள் உருவான நாள் விண்கல் பூமியை தாக்கிய நாளாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டகோட்டா மாகாணத்தில் உள்ள டானிஸ் புதைப்படிம தளத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வானில் இருந்த விழுந்த குப்பைகளை சுவாசித்த மீன்களின் புதைப்படிமங்களையும் கண்டுபிடித்துள்ளனர். 

    இதுகுறித்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாற்று பேராசிரியரும், இதனைக் கண்டறிந்தவருமான பிலிப் மோனிங் கருத்து தெரிவித்துள்ளார். கிடைக்கப்பட்ட எலும்பானது ஒரு டைனோசரின் அழகான எலும்பு ஆகும். இந்த சமயத்தில் நாம் இந்த இடத்தை கண்டறிந்தது காலத்திற்கு அப்பாற்பட்டது ஆகும். இந்த அழகான உயிரினங்களை அழிந்திருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், நான் என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரமாக, ஒரு அழகான கதை உடைய இந்த இடத்தைப் பற்றி கண்டறிவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். 

    இந்த அறிக்கையை மதிப்பாய்வு செய்த டேவிட் அட்டன்பரோ, இந்த புதைப்படிமங்கள் தெசலோரஸ் என்ற பல்லி வடிவ டைனோசருடையது என்றும் இவை செதில்கள் நிறைந்த தோலுடன், மாமிசம் உண்ணக்கூடியவையாக இருந்துள்ளன என்றும் கூறியுள்ளார். 

    இவை ஒரு விலங்கு இனத்தை சேர்ந்தவை. இவற்றின் கால்கள் மிக இலகுவாக பிய்த்து எடுக்க முடிந்தது. இவற்றின் கால்களில் நோய் ஏற்பட்டதற்கான அறிகுறியோ, நோய்குறியியல் சார்ந்த அறிகுறிகளோ, ஏதேனும் தாக்கியதற்கான அறிகுறியோ அல்லது வேறு மிருகங்கள் ஏதேனும் கடித்ததற்கான அறிகுறியோ இல்லை. எனவே இவை தாக்கிய உடனேயே இறந்துள்ளன என்று லண்டன் இயற்கை வரலாற்று ஆய்வகத்தின் பேராசிரியர் பால் பேரட் கூறியுள்ளார். 

    மேலும், இந்த டானிஸ் தோண்டும் நிகழ்வை வழிநடத்தும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மாணவர், ராபர்ட் டிபால்மா அவர்கள் சிறுகோள் பூமியைத் தாக்கிய பிறகு நொடிக்கு நொடி என்ன நடந்தது என்பதை இந்த இடம் விளக்குகிறது என்றும் தாக்கத்தினால் ஏற்பட்ட தூண்கள் காணப்படுகின்றன. புதைபடிமங்கள் காணப்படுகின்றன என்றும் இவை சினிமாவில் இருப்பதை போல தெளிவாக நமக்கு எல்லாவற்றையும் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....