Tuesday, March 19, 2024
மேலும்
  Homeஅறிவியல்விண்வெளியில் இருந்து ஒலி கேட்கிறதா? குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் !

  விண்வெளியில் இருந்து ஒலி கேட்கிறதா? குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் !

  விண்வெளியின் தொலைதூரப் பகுதியில் இருந்து வந்திருக்கும் சக்திவாய்ந்த வானொலி சமிக்ஞைகள் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் குழப்பத்தை அளித்துள்ளது. மேலும் இந்நிகழ்வு FRB எனப்படும் ரேடியோ அலைகளின் தீவிர துடிப்புகளின்  (FAST RADIO BURST) மர்மத்தையும் அதிகரித்துள்ளது. சயின்ஸ் அலெர்ட்ஸ் (science alerts) எனும் அமைப்பினால் முதன்முதலில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, FRB121102 வெறுமனே 47 நாட்களில் 1652 நட்சத்திர துடிப்புகளை (flares) நிகழ்த்தியிருக்கிறது.முதன்முதலில் 2007-ல் ரேடியோ அலைகளின் தீவிரத்துடிப்பை பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொள்கையில் அது அவர்களுக்கே ஆச்சரியத்தைதான் கொடுத்தது. அந்த ஆராய்ச்சியாளர்களை கொண்டு பில்லியன் கணக்கான ஓளியாண்டு தொலைவில் உள்ள மில்லியன் கணக்கான விண்மீன் திரள்களிலிருந்து தோன்றிய பல மூலங்களைக் கண்டறிய முடியும். கண்டுபிடிக்கப்படும் மூலப்பொருள்கள், நூற்றுகணக்கான மில்லியன் சூரியன்களின் அளவுக்கு அதிக சக்தியை வெளியிடும் ஆற்றலை உடையது.

  சக்திவாய்ந்த நட்சத்திர துடிப்புகள் விரைவில் தோன்றி, நிகழாததுபோல் விரைவில் மறைந்தும் விடும் அவ்வாறான நிகழ்வுகளின்போது அதன் மூலப்பொருளை கண்டறிய முடியாமல் போய்விடுகிறது. அதற்கான காரணத்தை கண்டறிவதென்பது கடினமாகிவிடுகிறது. பால்வழி அண்டத்தில் கண்டறியப்பட்ட காந்தகங்கள் மூலம் தீவிர நட்சத்திர துடிப்புகள் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டன.

  நட்சத்திர துடிப்புகளுக்கு இடையில் ஏற்படும் சீரான கால இடைவெளிகள் இந்நிகழ்வை பற்றி அறிந்துக்கொள்ள தேவையான விவரங்களை தருகிறது. அதே நேரத்தில், கால இடைவேளிகள் சீராக நிகழாமல் போனால் அவை ஏற்கனவே சுழன்று கொண்டிருக்கும் பொருள்களின் மூலத்தை பாதித்துவிடுமென்றும், நட்சத்திர துடிப்பு பற்றி தெரிந்துக்கொள்வதில் கடினத்தை ஏற்படுத்திவிடுமென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  ஆரம்பத்தில் கூறியதன்படி FRB121102 மிக முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் தான் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஒரு சிறிய விண்மீன் கூட்டத்தை கண்டுபிடித்தனர். இவற்றின் தீவிர நட்சத்திர துடிப்பு  90 நாட்கள் நடைபெற, அவற்றில் 67 நாட்கள் துடிப்புகள் சீராக நிகழ்ந்திருந்தது. மேலும் இதனூடாக FRB121102 -ஐ FAST எனப்படும் ஐநூறு மீட்டர் தொலைவுள்ள துளை கோள வானொலி தொலைநோக்கியை பயன்படுத்தி அதன் செயல்களை கண்டடைந்தது ஆச்சரியமாக இருந்தது.

  தொலைநோக்கி இயக்கப்பட்ட காலமான 29-08-2019 மற்றும் 29-10-2019 ல் சுமார் 59.5 மணி நேர இடைவேளையில் 1652 துடிப்புகள் கண்டறியப்பட்டன. ஒரு மணி நேர இடைவேளியில் நேர்ந்த உச்சபட்ச நட்சத்திர துடிப்பின் விகிதம் 122. இதுவே தீவிர நட்சத்திர துடிப்பின் மிக உயர்ந்த செயல்பாடாக கருதப்படுகிறது. இந்த கண்டறிதல்கள் மூலத்தின் செயல்பாட்டின் புள்ளிவிவர பகுப்பாய்விற்கு வழி வகுத்தன.

  பகுப்பாய்வில் பெறப்பட்ட தரவுகளின் படி, 1 மில்லி வினாடி மற்றும் 1000 வினாடிகளுக்கு இடையில் நிகழும் துடிப்புகளின் கால இடைவெளியை நம்மால் அறியமுடிகிறது. இந்த காலகட்டத்தில் காந்தங்கள் சுழற்சி விகிதங்களைக் கொண்டுள்ளன. நட்சத்திரத்தின் மேற்பரப்பில் நிகழும்  மாற்றங்களின் காரணமாக வெடிப்புகள் ஏற்பட்டிருந்தால், அது அவ்வப்போது தோன்றியிருக்க வேண்டும்.  ஆனால் தரவு அத்தகைய அறிகுறிகளைக் காட்டவில்லை எனவே காந்தங்கள் மட்டுமே FRB களின் ஆதாரம் அல்ல என்பதை அறியலாம்.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....