Friday, April 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவிஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டியில் தனி ஆளாய் போராடிய ருதுராஜ் கெய்க்வாட்..

    விஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டியில் தனி ஆளாய் போராடிய ருதுராஜ் கெய்க்வாட்..

    விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் மஹாராஷ்டிர அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. 

    இந்தியாவில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கிய விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மஹாராஷ்டிரா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் விளையாடி வருகிறது.

    விஜய் ஹசாரே 50 ஓவர் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முதன்முதலாக, மஹாராஷ்டிரா அணி தகுதிப்பெற்றுள்ளது. அதேசமயம், சௌராஷ்டிரா முன்னமே ஒரு முறை கோப்பையை கைப்பற்றி, இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற இன்றைய போட்டியை ஆரம்பித்தது. 

    இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற சௌராஷ்டிர அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிரா அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ருதுராஜ் கெய்க்வாட், பவன் ஷா  ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இதில் பவன் ஷா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரியளவில் ரன்களை சோபிக்காத நிலையில், மறுபுறம் விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 108 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோருக்கு பக்க பலமாக இருந்தார். 

    மொத்தத்தில், மஹாராஷ்டிர அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சௌராஷ்டிரா அணி தற்போது விளையாடி வருகிறது. 

    புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகுமா? – வெளிவந்த தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....